புதன்கிழமை, மார்ச் 12, 2025

வீரா சீரியலில் மாறனை காப்பாற்றிய காதலை வெளிப்படுத்திய வீரா.. தோற்றுப் போன வெறியில் கண்மணி

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், மாறன் மீது எந்தத் தவறும் இல்லை என்று புரிந்து கொண்ட வீரா முழுக்க முழுக்க மாறனை காப்பாற்றுவதற்கு களத்தில் இறங்கிவிட்டார். அத்துடன் விபத்து ஏற்படுத்தியது ராகவன் மாமா தான், ஆனாலும் சுயநலமாக வேடிக்கை பார்க்கிறார் என்ற கோபத்தில் மாறனை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்று வாதாட ஆரம்பித்து விட்டார்.

வீராவை தடுக்க வேண்டும் என்பதற்கு கண்மணியும் முயற்சி எடுத்தார். ஆனால் வீரா, மாறனை காப்பாற்றிய ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நிலையில் மாறன் மீது பொய் சாட்சி சொன்ன நபரை விசாரிக்கும் வகையில் பாயிண்ட் பாயிண்டாக கேள்வி கேட்டு அவர் பொய் சாட்சி தான் சொல்லி இருக்கிறார் என்று உண்மையை நிரூபித்து விட்டார்.

அந்த வகையில் வீரா எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும் விதமாக மாறன் இந்த கேசில் இருந்து விடுதலை ஆகிவிட்டார். ஆனாலும் இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்மணி தோற்றுப் போய் வெறிகொண்ட கோபத்தில் இருக்கிறார். அதனால் வேறு விதமாக ராமச்சந்திரன் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்பதற்காக கண்கொத்தி பாம்பாக காய் நகர்த்த போகிறார்.

இதனை தொடர்ந்து மாறன் மீது எந்த தவறும் இல்லை என்று சொன்ன தீர்ப்பின் படி மாறன் வெளிவந்ததும் மொத்த காதலை வெளிப்படுத்தும் விதமாக வீரா அன்பை காட்டிவிட்டார். இதனைத் தொடர்ந்து மாறனை சந்தோஷப்படுத்த மாறன் ஆசைப்பட்ட விஷயங்களை வீரா ஒவ்வொன்றாக செய்து முடிக்க போகிறார்.

Trending News