கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் வில்லனாக நடிக்கும் கலாச்சாரம் பெருகி வருகிறது. அப்படி வில்லன் அவதாரம் எடுத்தவர்கள் அர்ஜுன், அருண் விஜய், விஜய் சேதுபதி, பாபி சிம்மா போன்றவர்களை இன்று ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் கேட்டு வருகிறார்கள். அப்படி ஐந்து ஹீரோக்கள் சம்பளமாக கேட்கும் பெரும் தொகைகள்.
அருண் விஜய்: ஐந்து கோடிகள் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அருண் விஜய் இப்பொழுது எட்டு கோடிகள் வரை வில்லனாக நடிப்பதற்கு கேட்கிறாராம். இட்லி கடை படத்தில் தனுசுக்கு வில்லனாக நடிக்க இவர் வாங்கிய சம்பளம் 8 கோடிகள்.
ரவி மோகன்: சமீபத்தில் ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகனாக மாற்றிக் கொண்டார். சுதா கொங்கார சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். அதற்கு அவர் வாங்க போகும் சம்பளம் 6 கோடிகள்.
அர்ஜுன்: விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடிக்க அர்ஜுன் வாங்கிய சம்பளம் 7 கோடிகள். இப்பொழுது அதையும் தாண்டி அடுத்தடுத்த படங்களுக்கு கேட்டு வருகிறார். தனுஷ் நடிக்க போகும் அடுத்த படத்திற்கு வில்லன் கதாபாத்திரத்திற்கு இவரை அணுகி உள்ளனர். இவர் பத்து கோடி வரை கேட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாபி சிம்மா: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர். ஜிகர்தண்டா படத்தில் சேது சதாபாத்திரம் இவருக்கு ஒரு டர்னிங் பாயிண்ட். அடுத்தடுத்து தொடர்ந்து வில்லனாக நடித்து வருகிறார். மூன்று கோடிகள் வாங்கிக் கொண்டு இருந்தவர் இப்பொழுது 5 கோடியில் வரை கேட்கிறார்.