சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025

பாக்கியாவுக்கு சம்மந்தியாக போகும் செல்வி அக்கா.. இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கல, காதலனை கூட்டிட்டு வந்த இனியா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி துரோகம் செய்திருந்தாலும் அதையெல்லாம் பெருசாக எடுத்து முடங்கிப் போகாமல் குடும்பத்திற்காகவும் தன்னுடைய எதிர்காலத்திற்காகவும் முன்னேறி காட்ட வேண்டும் என்று பாக்கியா போராடினார். அந்த வகையில் ஈஸ்வரி ரெஸ்டாரண்ட் ஆரம்பித்து நல்லபடியாக பேரும் புகழையும் சம்பாதித்து விட்டார்.

அத்துடன் தற்போது இரண்டாவது ரெஸ்டாரண்டை ஓப்பன் பண்ணும் விதமாக பாக்கியா அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டார். இதை பார்த்த கோபி, ஈஸ்வரிடம் பாக்யா இவ்வளவு புத்திசாலித்தனமாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவதை பார்க்கும் பொழுது ரொம்பவே வியப்பாக இருக்கிறது. என்னால் கூட இவ்வளவு தூரம் ஓட முடியாது. ஆனால் பாக்கியா எதற்கும் அசராமல் ஜெயித்துக் கொண்டு வருகிறார் என்று பாராட்டி பேசுகிறார்.

அடுத்து பாக்கியா புது ஹோட்டலுக்கு வந்து விட்டார். அங்கே ஜெனி அமிர்தா எழில் செழியன் என அனைவரும் வந்த நிலையில் இனியா தான் காதலித்த காதலனையும் வர சொல்லி காத்துக் கொண்டிருக்கிறார். எல்லோரும் புது ஹோட்டலில் பரபரப்பாக இருக்கும் சமயத்தில் இனியா மட்டும் காதலன் ஆகாசுக்கு போன் பண்ணி நீ நிச்சயம் வர வேண்டும் என்று வற்புறுத்தி கூப்பிடுகிறார்.

அதன்பிறகு ஆகாசும் பாக்கியாவின் ஹோட்டலுக்குள் நுழைந்து விடுகிறார். அங்கே தான் எதிர்பார்க்காத ஒரு ட்யூஸ்ட் இருக்கிறது, அதாவது இனியா காதலிக்கும் ஆகாஷ் பாக்கியா வீட்டில் பல வருடங்களாக வேலை பார்த்து வரும் செல்வி அக்காவின் மகன். ஆகாஷை அனைவருக்கும் தெரிந்த நிலையில் இனியா காதலிக்கும் பையன் ஆகாஷ் தான் என்ற விஷயம் மட்டும் யாருக்கும் தெரியவில்லை.

ஆனாலும் ஆகாஷ், செல்வி அக்கா பையன் தான் என்று இனியாவுக்கு தெரிந்த நிலையில் காசு பணம் வசதி எல்லாம் பெரிய விஷயம் இல்லை என்று இனியா ஆகாஷை காதலித்து வருவது ஈஸ்வரி எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பது தெரியவில்லை. இவர்கள் விஷயம் வீட்டுக்கு தெரிந்தாலும் ஈஸ்வரி தவிர மற்றவர்கள் அனைவரும் சம்மதம் கொடுத்து விடுவார்கள்.

பிறகு வழக்கம் போல் ஈஸ்வரியை சமாதானப்படுத்தி இனியா ஆகாஷை பாக்யா ஒன்று சேர்த்து விடுவார். அடுத்ததாக புது ஹோட்டலுக்கும் ஈஸ்வரி பெயர் வைத்து ஈஸ்வரியை ஓபன் பண்ண சொல்கிறார். இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் சேர்ந்து எல்லோரும் ஒற்றுமையாக அந்த பங்க்ஷனில் கலந்து கொண்டார்கள். அங்கே கோபி வந்து பாக்யாவிற்கு வாழ்த்து சொல்லி பாக்கியாவின் குடும்பத்துடன் ஐக்கியம் ஆகி விடுகிறார்.

அந்த வகையில் ராதிகாவை மொத்தமாக கோபி மறந்து விட்டார். இதற்கு பருத்திமூட்ட பேசாம குடோன்லயே இருந்திருக்கலாம் என்பதற்கு ஏற்ப கோபி பாக்கியா உடனே காலத்தை ஓட்டி இருக்கலாம்.

Trending News