சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025

மகாநதி சீரியலில் காவிரியிடம் காதலை சொன்ன விஜய்.. பிரிந்து இருந்து டாம் அண்ட் ஜெர்ரி ஆக சண்டை போடும் VIKA

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், தன்னுடைய அம்மாவின் மன திருப்திக்காக அம்மாவை சந்தோசமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று காவிரி முடிவெடுத்து விட்டார். அந்த வகையில் பழைய மாதிரி காவேரி சிரித்து பேசி குடும்பத்தில் இருப்பவர்களை கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு கொண்டு வர முயற்சி எடுக்கிறார்.

அத்துடன் வேலைக்கு போனால் எல்லாம் சரியாகிவிடும் என்று முடிவெடுத்த காவிரிக்கு, சாரதா அம்மாவும் சரி என்று சொல்லிவிட்டார். அதனால் காவேரி வேலைக்காக இன்டர்வியூக்கு போய்விட்டார். போன இடத்தில் காவிரியை பார்த்ததும் இது விஜயின் மனைவி என்று கௌதம், விஜய்க்கு போன் பண்ணி சொல்கிறார். அதன்பின் விஜயும் காவிரி இருக்கும் ஆபீஸ்க்கு வந்து விடுகிறார்.

அப்பொழுது விஜய் தன் மனதில் இருக்கும் காதலை மொத்தமாக வெளிப்படுத்தும் விதமாக நான் உன்னை சும்மாதான் வெளியே போக சொன்னேன். மற்றபடி நான் மனசார எதுவும் சொல்லவில்லை, உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க தான் நான் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணினேன். உன்னை வேண்டாம் என்று நினைத்தால் உன் பின்னாடியே நான் இப்படி வருவனா கொஞ்சமாக யோசித்துப் பாரு என்று விஜய் சொல்கிறார்.

நீங்கள் என்னதான் சொன்னாலும் இப்பொழுது நான் இதைப் பற்றியும் யோசிக்கும் நிலைமையில் இல்லை. என்னுடைய அம்மாவின் சந்தோசம் தான் எனக்கு முக்கியம். என்னால் அவங்க ரொம்பவே கஷ்டப்பட்டு வருகிறார்கள். எங்க அப்பா என்னை நம்பி என்னுடைய குடும்பத்தை விட்டுட்டு போனாங்க. ஆனால் இப்பொழுது அவங்க கஷ்டப்படுவதற்கு நானே ஒரு காரணமாகி விட்டேன் என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இருக்கிறது.

அதனால் அதை சரி செய்ய வேண்டுமென்றால் எங்க அம்மா கூடவே நான் இருக்க வேண்டும் என்று சொல்கிறார். அது மட்டும் இல்லாமல் நம்முடைய ஒப்பந்த கல்யாணம் அம்மாவுக்கு தெரிய வந்தாலும் இரண்டு நாட்களில் நீங்கள் வந்து என்னை சமாதானப்படுத்தி கூட்டிட்டு போனால் அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க ஓகே சொல்லிடுவாங்கள் என்று நினைத்தேன். ஆனால் அம்மா வேற மாதிரி யோசித்து உங்க கூட வாழவே கூடாது என்று என்னிடம் சொல்லிவிட்டார்கள்.

அதனால் இப்பொழுது எங்க அம்மாவை மட்டும் தான் என்னால் யோசிக்க முடியும் என்னை தொடர்ந்து தொந்தரவு பண்ணாதீங்க என்று விஜய் சொன்ன காதலை மறுத்துவிட்டார். ஆனாலும் விஜய், காவேரியை விடுவதாக தெரியவில்லை. பிறகு விஜய் நண்பர் கௌதம், புருஷன் கோவிச்சுட்டு பொண்டாட்டி இரண்டு நாள் அம்மா வீட்டுக்கு போறது சகஜம் தான் என்று சொல்கிறார்.

உடனே விஜயும் இது நல்லா இருக்கிறதே நானும் அப்படியே எடுத்துக் கொள்கிறேன் என்று பீலிங்ஸ் மூடிலிருந்து விஜய் வெளிவந்து விட்டார். அதன் பின் காவிரிக்கு வேலை கிடைத்துவிட்டது மாசம் 70 ஆயிரம் சம்பளம் என்று டீல் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் காவிரி இதற்குப் பின்னால் விஜய் இருப்பார் என்று புரிந்து கொண்டு இந்த வேலை வேண்டாம் என்று போய்விட்டார்.

ஆனாலும் விஜய் தொடர்ந்து காவிரியை வேலையில் சேர்க்க வேண்டும் என்பதற்காக வேறொரு நண்பர் மூலம் ஏற்பாடு பண்ணுகிறார். அந்த வகையில் தற்போது இவர்கள் இரண்டு பேரும் பிரிந்து இருந்தாலும் இவர்களுடைய செல்ல சண்டைகள் ஓயப் போவதில்லை என்பதற்கு ஏற்ப விறுவிறுப்பாக டாம் அண்ட் ஜெர்ரி சண்டை போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

Trending News