Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மற்றும் மீனாவுக்கு ஜலதோஷம் பிடித்திருக்கிறது என்பதால் ஆவி பிடிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு என்று தனி ரூம் இல்லாததால் நடு வீட்டுக்குள் வைத்து இரண்டு பேரும் போர்வையை மூடி ஆவி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களை பார்த்து தவறாக புரிந்து கொண்ட விஜயா வாய்க்கு வந்தபடி திட்டி விடுகிறார்.
உடனே மீனா ஆவி நான் பிடிக்கவில்லை என்று எழுந்த நிலையில் முத்து, மீனாவை சமாதானப்படுத்துகிறார். அப்பொழுது ரூமுக்குள் இருந்து வெளிவந்த மனோஜ், கீழே வெந்நீர் இருப்பதை பார்க்காமல் தட்டி விழுந்து விடுகிறார். இதனை பார்த்த விஜயா மற்றும் ரோகினி, எதற்காக மனோஜ் மீது வெந்நீர் ஊற்றினீங்க என்று கேட்கிறார்கள்.
அதற்கு நான் ஏன் ஊற்ற போகிறேன் கீழே இருக்கும் வெந்நீரை பார்க்காமல் அவனா விழுந்து விட்டான் என்று சொல்கிறார். உடனே ரோகிணி இங்க வச்சு தான் நீங்க ஆவி பிடிக்கணுமா என்று கேட்ட நிலையில் முத்து எங்களுக்கு என்ன தனி ரூமா இருக்கிறது. ஆளுக்கு ஒவ்வொருவரும் ரூம் எடுத்துக்கிட்டு எங்களை இந்த ஓரமாக இருக்க வச்சுட்டீங்க.
ஆவி பிடிக்கிறதாக இருந்தாலும் சரி, பேசுறதாக இருந்தாலும் சரி எல்லாம் நாங்கள் இங்க வச்சு தான் பண்ற மாதிரி எங்களுடைய நிலைமை இருக்கிறது. இதை பற்றி யாருக்கும் கவலையிலே இல்ல, நாங்கள் என்ன பண்ண முடியும் என்று பேசிய நிலையில் சுருதி ஆமாம் அவர் சொல்வதும் சரிதானே என்று வக்காலத்து வாங்க வந்து விட்டார்.
உடனே விஜயா, ரூம் இல்லையென்றால் என்ன நீங்க தான் வாயாலேயே மாடியில் ரூம் கட்டி வச்சிருக்கீங்க தானே அங்க போய் இருந்துக்க வேண்டியது தானே என்று மீனாவை அவமானப்படுத்தும் அளவிற்கு எல்லாரும் முன்னாடியும் பேசி விடுகிறார். மீனா எவ்வளவு அவமானப்பட்டாலும் எதர்க்கும் அசராமல் வேடிக்கை பார்க்க போய் தான் விஜயா மற்றும் ரோகிணி நாளுக்கு நாள் ஓவராக ஆடிக் கொண்டு வருகிறார்கள்.
இதற்கு ஒரே வழி மீனா மற்றும் முத்து சம்பாதித்த பணத்தில் மாடியில் ரூம் கட்டினால் தான் விஜயாவின் ஆணவத்திற்கு கொஞ்சம் பதிலடி கொடுத்த மாதிரி இருக்கும். அடுத்ததாக மனோஜ்க்கு, சந்தோஷி சார் கால் பண்ணுகிறார். அவருடைய பிசினஸ் விஷயமாக மலேசியாவில் இருப்பதாகவும், அங்கே சில உதவிகள் தேவைப்படுவதாகவும் ரோகிணி அப்பாவின் நம்பரை கேட்கிறார்.
உடனே மனோஜ், ரோகினி அப்பா இறந்து போய்விட்டார் என்று சொல்லாமல் அவர் வேற ஒரு நாட்டுக்கு போய் இருக்கிறார் என்று சொல்லி சமாளித்து விடுகிறார். ஆனாலும் சந்தோஷ் சார் அவருடைய போன் நம்பர் இருந்தால் போதும் எனக்கு கொடுங்க என்று கேட்கிறார். உடனே மனோஜ், நான் ரோகினிடம் கேட்டு வாங்கி தருகிறேன் என்று சொல்லிய நிலையில் ரோகினிடம் உங்க மலேசிய மாமாவின் நம்பரை கொடுத்து உதவி பண்ண சொல்லுவோம்.
அதன் மூலம் நமக்கு இருக்கும் ஒரு சில பிரச்சினைகளையும் சரி செய்துவிடலாம் என்று சொல்கிறார். ஆனால் ரோகிணி ஏற்கனவே அந்த ஆள் நடிக்க வர மாட்டேன்னு கடைசி முறை சொல்லிட்டார். மறுபடியும் அவரை நடிக்க கூப்பிட்டால் என்ன சொல்லப் போகிறார் என்று புலம்பி கொள்கிறார். ஆக மொத்தத்தில் இந்த கசாப்பு கடை மணிக்கு முடிவு கட்டும் விதமாக கூடிய சீக்கிரத்தில் ஒரு வழி பிறக்கப் போகிறது. இதன் மூலம் ரோகிணியின் மலேசியா ட்ராமா வெளி வந்துவிடும்.
அடுத்ததாக டிராபிக் போலீஸ் அருண், ஹெல்மெட் போடாமல் போன் பேசிக்கொண்டு பைக்கில் போனதையும் நோ பார்க்கில் பைக்கை விட்டதையும் முத்து வீடியோ எடுத்து இணையதளத்தில் போட்டு விட்டார். இதனைப் பார்த்த போலீஸ் ஆபீசர் அருணை மூன்று நாள் சஸ்பெண்ட் பண்ணிவிட்டார். இதை கேள்விப்பட்டதும் டிராபிக் போலீஸ் அருண் என்னுடைய கேரியரில் முதல் பிளாக் மார்க் விழுந்துவிட்டது.
இதற்கு காரணம் யார் என்று எனக்கு தெரியும் அவரை நான் சும்மா விடமாட்டேன் என்று மோதுவதற்கு தயாராகி விட்டார். ஆனால் இந்த அருண் தான் மீனாவின் தங்கை சீதாவை கல்யாணம் பண்ணப் போகிறார் நமக்கு சகலையாக வரப்போகிறார் என்று தெரியாமல் முத்து மற்றும் அருண் அடிக்கடி மோதிக் கொள்கிறார்கள்.