Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், முத்துவேலு மற்றும் சக்திவேல் சேர்ந்து பழனிவேலுவின் கல்யாணத்தை நிறுத்திய விஷயம் வெளிவந்து விட்டது. இதனால் ஆத்திரமடைந்த பழனிவேலு இனியும் உங்களுடன் இருந்தால் எனக்கு நிம்மதி இருக்காது என்று சொல்லி புதுசாக கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்த சுகன்யாவை கூட்டிட்டு பாண்டியன் வீட்டிற்கு போய்விட்டார்.
இதெல்லாம் எதிர்பார்க்காத பாண்டியன் என்னாச்சு என்று கேட்ட நிலையில் எனக்கு அவங்க கூட இருக்க பிடிக்கவில்லை. இப்பொழுது நீங்க சொல்லுங்க உங்க வீட்டுக்குள் நான் வரலாமா என்று கேட்கிறார். அதற்கு பாண்டியன் தாராளமாக வரலாம் என்று ஆரத்தி எடுத்து பழனிவேலுவையும் சுகன்யாவும் வரவேற்று விட்டார்கள். தம்பி மறுபடியும் தன்னுடனே வந்து விட்டான் என்ற சந்தோசத்தில் கோமதி விருந்து சாப்பாடு பண்ண தயாராகி விட்டார்.
அப்பொழுது மீனா ராஜி தங்கமயில் மற்றும் கோமதி அனைவரும் சேர்ந்து சமைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அங்கே சுகன்யாவும் சென்று நானும் உங்களுக்கு உதவி செய்யலாமா, எனக்கு தனியாக இருக்க போர் அடிக்கிறது என்று நல்ல மருமகள் பெயர் எடுப்பதற்காக பேசி விடுகிறார். அப்பொழுது வெளியே பைக் சத்தம் கேட்டதும் அவர் வந்துவிட்டார் என்று நினைக்கிறேன் நான் வாசலில் போய் பார்க்கிறேன் என்று சொல்லி போய் விடுகிறார்.
உடனே கோமதி, சுகன்யா நல்ல பொண்ணா இருக்கிறாள் என்று மருமகள்களிடம் சொல்கிறார். அப்படி வாசலில் நின்று கொண்டிருந்த சுகன்யாவை பார்த்ததும் பழனிவேலு என்னாச்சு ஏன் இங்கே நிற்கிறாய் உள்ள வா என்று கூப்பிடுகிறார். அதற்கு சுகன்யா நமக்கு எந்த ரூம் என்று தெரியாமல் நான் எங்கே வருவேன். துணியை கூட வைக்க இடம் இல்லாமல் டைனிங் டேபிள் பக்கத்தில் வைத்திருக்கிறேன்.
அதை கூட யாரும் புரிந்து கொள்ளாமல் என்னை கண்டு கொள்ளவில்லை, அதனால் நமக்கு தனி ரூம் இருந்தால் மட்டும்தான் நான் இங்கே இருப்பேன். இல்லையென்றால் என்னுடன் வாங்க நாம் அங்கேயே போய்விடலாம் என்று சுகன்யா பழனிவேல் இடம் சண்டை போடுகிறார். இன்னொரு பக்கம் பாண்டியன், கோமதி இடம் பழனிவேலுவுக்கு தனி ரூம் கட்டும் வரை நம்ரூமில் அவங்க தங்கிக் கொள்ளட்டும்.
நீ நான் மற்றும் அரசி அனைவரும் ஹாலில் தூங்கிக் கொள்ளலாம் என்று சொல்கிறார். உடனே கோமதியும் சரி என்று சொல்லிய நிலையில் வெளியே வந்து சுகன்யா மற்றும் பழனிவேல் இடம் எங்கு ரூமில் தங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். உடனே பழனிவேலு, நீங்க எங்க தங்க போறீங்க அதெல்லாம் வேண்டாம் நான் ஹாலில் தூங்கிக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.
அதற்கு கோமதி, இப்பொழுது நீ தனி ஆளு கிடையாது. உனக்கு கல்யாணம் ஆகி இருக்கிறது அதனால் நீ எங்க ரூமை எடுத்துக் கொள் என்று சொல்லிவிடுகிறார். ஆனால் இந்த சுகன்யா வெளியில் ஒரு முகமூடியை போட்டுக்கொண்டு நல்லவள் மாதிரி நடித்து வருகிறார். ஆனால் பழனிவேலுவிடம் உண்மையான சுய ரூபத்தைக் காட்டி டார்ச்சர் பண்ண ஆரம்பித்து விட்டார்.
அத்துடன் குமரவேலு மற்றும் அரிசி இருவர் மனதிலும் காதல் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு இவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து பாண்டியன் குடும்பத்தில் ஏழரை உண்டாக்கும் அளவிற்கு பழனிவேலுவின் மனைவி சுகன்யா சக்திவேலுடன் சேர்ந்து பிளான் பண்ண போகிறார். இதுவரை ஒற்றுமையாகவும் நல்லா இருந்த பாண்டியன் குடும்பத்தில் பூகம்பமாக சுகன்யா நுழைந்து ஒவ்வொருவரையும் அல்லல்படுத்தப் போகிறார்.