சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025

பாலிவுட் நடிகையின் காலில் விழுந்த ஜோதிகா.. இந்தி ஆசையால் இந்த அளவுக்கு இறங்கி போகணுமா மேடம்?

Jyothika: நடிகை ஜோதிகா பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே அவருக்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு குறைய தொடங்கியது.

அதிலும் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியாம இஷ்டத்துக்கு பேட்டி கொடுத்து இன்னும் டேமேஜ் ஆகி கொண்டார்.

ஜோதிகா செய்யும் ஒவ்வொரு விஷயமும் சூர்யாவின் சினிமா கேரியரையும் பலமாக பாதித்து வருகிறது.

நடிகையின் காலில் விழுந்த ஜோதிகா

என்ன நடந்தாலும் பரவாயில்லை பாலிவுட் சினிமா உலகில் என்னுடைய முழு கவனத்தையும் செலுத்துவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஜோதிகாவுக்கு தமிழில் லயன் என்ற படம் மட்டும் தற்போது கைவசம் இருக்கிறது.

ஜோதிகா மற்றும் பிரபல பாலிவுட் நடிகை ஆஸ்மி இணைந்து நடித்த டப்பா கார்ட்டெல் என்னும் வலைத்தொடர் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த தொடரின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவின்போது பிரபல நடிகை காலில் ஜோதிகா விழுந்து வணங்குகிறார்.

Jyothika
Jyothika

முதலில் அரண்டு போன ஆஸ்மி அவரை பின்பு ஆசீர்வதிக்கிறார். தற்போது இணையதளங்களில் இது பெரிய அளவில் பேசும் பொருளாகி இருக்கிறது.

இந்தி வாய்ப்புக்காக இந்த அளவுக்கு இறங்கி போகணுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Trending News