சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025

வேள்பாரி ரைட்ஸ் கையில் இருந்தும் பரிதவிக்கும் சங்கர்.. நேரம் பார்த்து அந்தர் பல்டி அடித்த லைக்கா

பல வருடங்களுக்கு முன்பே சங்கர் வேள்பாரி கதையின் ரைட்சை சு வெங்கடேசன் இடமிருந்து வாங்கிவிட்டார். இந்த கதைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்த்து ஒரு பெத்த தொகைக்கு அதை வாங்கி வைத்து விட்டார். இது அவருடைய கனவு படமாக இருக்கிறது.

கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படத்தை மூன்று பாகங்களாக எடுக்கவும் திட்டமிட்டு இருந்தார். இதற்காக இரண்டு ஹீரோக்களையும் மனதில் தேர்ந்தெடுத்து வைத்துள்ளார். சூர்யா மற்றும் ரன்வீர் சிங் போன்ற ஹீரோக்களை வைத்து இந்த படத்தை எடுக்க திட்டம் தீட்டினார்.

இந்த படத்திற்கு ஒரு வருடம் தேவைப்படும் என்பதால் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் பின்வாங்கினார்கள். இதனால் சங்கர் இந்தியன் 2 ,இந்தியன் 3, கேம் சேஞ்சர் போன்ற படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இந்த படங்களை முடித்துவிட்டு வேள்பாரி கதையை ஆரம்பிக்கலாம் என மனக்கோட்டை கட்டி வந்தார்.

துரதிஷ்டமாக அவர் எடுத்த அத்தனை படங்களும் சமீபத்தில் அவருக்கு எமனாய் வந்து நின்றது. இந்த படங்களை தயாரித்த லைகா நிறுவனத்திற்கு பெரிய நஷ்டமும் ஏற்பட்டது. 400 கோடி பொருட்செளவில் எடுக்கப்பட்ட இந்தியன் 2 படம் மோசமான அடியை கொடுத்தது.

இது ஒரு பக்கம் இருக்க கேம் சேஞ்சர் படமும் அவருக்கு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் இப்பொழுது இந்தியன் 3 எடுப்பதற்கு சம்பள பாக்கியும் வைத்து விட்டார்கள் லைகா. வேள்பாரி கதையை சங்கர், லைகா நிறுவனத்தை வைத்து தான் திட்டம் போட்டு வந்தார். ஆனால் அதுவும் இப்பொழுது கோவிந்தா போட்டுள்ளது.

Trending News