This Week OTT Release: இந்த வாரம் தியேட்டரில் இரண்டு முக்கிய படங்கள் நேருக்கு நேர் மோதுகின்றன. தனுஷ் இயக்கி தயாரித்துள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நாளை வெளியாகிறது.
இளம் பட்டாளங்கள் நடித்திருக்கும் இப்படத்திற்கான பிரமோஷன் அதிக கவனம் பெற்றுள்ளது. அதேபோல் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படமும் நாளை திரைக்கு வருகிறது.
இதன் பிரமோஷனும் சூடு பிடித்துள்ள நிலையில் இரண்டு படங்களில் எது கவனம் பெறும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல் டிஜிட்டலிலும் சில முக்கிய படங்கள் இந்த வார இறுதியில் வெளியாகின்றன.
வீக் எண்ட் கொண்டாட்டமாக வரும் வணங்கான்
அதன்படி ஹாலிவுட் படமான முஃபாசா தி லைன் கிங் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி இருக்கிறது. ஆனால் தமிழ் டப்பிங் கிடையாது.
அதேபோல் தெலுங்கு படமான சம்மேளனம் Etv win தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. மேலும் ரீச்சர் சீசன் 3 பிரைம் தளத்திலும் ஜீரோ டே சீரிஸ் நெட்பிலிக்ஸ் தளத்திலும் இன்று வெளியாகி இருக்கிறது.
இதைத்தொடர்ந்து நாளை பாலா, அருண் விஜய் கூட்டணியில் வெளிவந்த வணங்கான் டென்ட் கொட்டா தளத்தில் வெளியாகிறது.
தெலுங்கு படமான டக்கு மகாராஜ் தமிழ் டப்பிங் உட்பட மற்ற மொழிகளில் நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் நாளை வெளியாகிறது அதே போல் ஆபிஸ் தமிழ் சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டார் நாளை தளத்தில் வெளியாகிறது.
அதைத்தொடர்ந்து பாட்டில் ராதா ஆஹா தமிழ் தளத்தில் வெளியாகிறது. இப்படியாக மேற்கண்ட படங்கள் இந்த வார இறுதியை மகிழ்விக்க வருகிறது.