சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025

எப்ப பொழுது விடியும் எப்ப விலைய ஏத்தலான்னு காத்துகிட்டு இருப்பீங்களா.. யார்ரா நீங்க, தங்கம் விலை உயர்வு மீம்ஸ்

Memes: இந்த வருடம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

இப்படியே போச்சுன்னா பொண்ண பெத்தவங்க எப்படி கல்யாணம் பண்ணுவாங்கன்னு பயம் ஒரு பக்கம் இருக்கிறது.

அதே சமயம் இதற்கு இல்லையா ஒரு எண்டு என வெளிப்படையாகவே மக்கள் புலம்புகின்றனர். இருந்தாலும் நகை கடைகளில் கூட்டம் இருந்தபடி தான் இருக்கிறது.

மிடில் கிளாஸ் மக்கள் தான் இந்த விலை ஏற்றத்தை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். இன்று ஒரு கிராம் 8070 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தைப்பூசம் அன்று கிராம் 8060 ரூபாய்க்கு விற்பனையானது. அதை அடுத்து ஏற்ற இறக்கம் இருந்த நிலையில் இன்று உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது தங்கம் விலை.

எப்படா பொழுது விடியும் எப்ப தங்கம் விலை ஏத்தலான்னு காத்துகிட்டு இருப்பாங்க போல போற போக்க பார்த்தா வெயிலுக்கு கூட நகைக்கடை பக்கம் ஒதுங்க முடியாது.

இது நம் மக்களின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கிறது. இதையே நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.

Trending News