Gossip: போட்டோ ஷூட்டுக்கு பெயர் போன அந்த நடிகைக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை இப்போது செம அப்செட்டில் இருக்கிறாராம்.
அதற்கு காரணம் நடிகையின் கணவர் பிசினஸில் பிஸியாக இருப்பது தான். சமீபத்தில் காதலர் தினத்தை வெளிநாட்டில் கொண்டாட நடிகை திட்டமிட்டு இருக்கிறார்.
ஆனால் கணவரோ எனக்கு அதுக்கெல்லாம் டைம் இல்ல. டிக்கெட் போட்டு தரேன் நீ போயிட்டு வா என அசால்டாக கூறி இருக்கிறார்.
இதனால் நொந்து போன நடிகை தனிமையில் இனிமை காண முடியுமா என வெளிநாடு ட்ரிப் சென்று வந்திருக்கிறார்.
அப்செட்டில் நடிகை எடுத்த முடிவு
அதைத்தொடர்ந்து தற்போது அவர் மீண்டும் நடிப்பதற்கு முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே சோசியல் மீடியாவில் அம்மணி பிரபலம்தான்.
அதேபோல் திருமணத்திற்கு பிறகும் அசத்தல் போட்டோக்களை வெளியிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இதன் மூலம் பட வாய்ப்பு பிடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.