Vijay: ஒரு படம் மொத்தமும் ஹீரோவின் நம்பித்தான் இருக்கிறது. ஹீரோவுக்காக தான் மக்கள் தியேட்டருக்கு வருகிறார்கள் என்று சொல்வதுண்டு.
ஆனால் அப்படிப்பட்ட தலையெழுத்தையே மாற்றி இருக்கிறார் பிரபல நடிகை ஒருவர்.
அதுவும் அந்த நடிகைக்காக பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜயின் படத்தையே தோல்வி படமாக்கி இருக்கிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.
நடிகையின் ரசிகர்களால் படுதோல்வி அடைந்த விஜய் படம்
இதை அந்த படத்தின் இயக்குனரே சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார். இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய், ரம்பா, குஷ்பூ, மணிவண்ணன் ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் மின்சார கண்ணா.
இந்தப் படம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை.
இந்த படத்தின் தயாரிப்பாளர் மும்பை இறக்குமதியான நடிகை மோனிகா தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டாராம்.
விஜயை ஒரு தலையாக காதலிக்கும் இரண்டாம் கதாநாயகியாக ரம்பாவை நடிக்க வைத்திருக்கிறார்கள். ரம்பாவுக்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு அதிகமாக இருந்த காலகட்டம் அது.
ஹீரோயின் பரிச்சயம் இல்லை, ரம்பா இரண்டாவது ஹீரோயின் என்பதால் இந்தப் படம், மக்களிடையே செல்லுபடி ஆகவில்லை என்று ரவிக்குமார் சொல்லி இருக்கிறார்.