Dhanush: இவர் எல்லாம் ஹீரோவா என்று தனுஷை கேட்ட காலம் போய் இப்போது இயக்குனர்கள் லிஸ்டில் இணைந்து விட்டார்.
பவர் பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து நேற்று இவர் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படமும் ரிலீஸ் ஆகிவிட்டது.
தனுஷின் முதல் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.
தனுஷ் இயக்கிய 7 படங்கள்
இந்த நிலையில் தனுஷ் இயக்குனர் ஆவதற்கு முன்பே அதற்கான ஒத்திகைகளில் ஈடுபட்ட படங்கள் என ஒரு பெரிய லிஸ்ட் வெளியாகியிருக்கிறது.
அதாவது பெயருக்கு ஏதாவது ஒரு இயக்குனரை வைத்துக்கொண்டு தனுஷ் கோஸ்ட் இயக்குனராக செயல்பட்டார் என்று சொல்லப்படுகிறது.
தனுஷின் முன்னாள் மனைவி இயக்கிய 3, தனுஷ் நஸ்ரியா நசீம் நடிப்பில் வெளியான நையாண்டி மேலும் மாரி , மாரி 2, விஐபி 2, வை ராஜா வை, நானே வருவேன் என்ற ஏழு படங்களுக்கு இவர்தான் கோஸ்ட் இயக்குனர் என சொல்லப்படுகிறது.
இது குறித்து தனுஷ் தரப்பில் இருந்து எந்த உறுதியான தகவல்களும் வெளியானது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.