Madhampatty Rangaraj: சமையல் கலைஞர் என்பதை தாண்டி தன்னுடைய வசீகரமான தோற்றத்தால் மக்களை கவர்ந்தவர் மாதம்பட்டி ரங்கராஜ்.
மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் குக் வித் கோமாளி நடுவராகி பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தார்.
இவர் தற்போது சினிமா பிரபலம் ஒருவரை டேட்டிங் செய்து கொண்டிருப்பதாக தெரிகிறது.
சும்மா வதந்தியாக வெளியாகும் செய்தி இல்லை அதை அந்த பிரபலமே தொடர்ந்து உறுதி செய்து கொண்டிருக்கிறார்.
டேட்டிங் செய்யும் மாதம்பட்டி
ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் அவருடைய ஸ்டைலிஸ்ட்டை டேட்டிங் செய்கிறார் போல.
கடந்த டிசம்பர் மாதம் மாதம்பட்டி ரங்கராஜ் இனிப்பகத்தில் இருந்து இனிப்புகள் பல பிரபலங்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் ஜாய் ரங்கராஜ் என குறிப்பிடப்பட்டிருந்தது. ரங்கராஜன் ஸ்டைலிஸ்ட் பெயர் ஜாய் கிரிசல்டா. அப்போது அந்த விஷயம் அரசல் புரசலாக பேசப்பட்டு பின்னர் அப்படியே மறைந்து போனது.

அதை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் ஜாய் கிரிசல்டா காதலர் தினத்தை மாதம்பட்டி ரங்கராஜ் உடன் செலவிட்டதாக ஒரு இன்ஸ்டா போஸ்ட் போட்டிருக்கிறார்.

அதில் மாதம்பட்டி ரங்கராஜன் மை மேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதேபோன்று சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு பூ வாங்கி கொடுத்ததாகவும் இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார்.
ஒரு பக்கம் ஜாய் கிரிசல்டா இன்ஸ்டா போஸ்ட்களை குவித்து கொண்டிருக்கும் நேரத்தில் மாதம்பட்டி ரங்கராஜன் விரைவில் இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ரசிகர்களின் கோரிக்கை.