ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2025

சன் டிவி டிஆர்பி-க்கு உலை வைக்க பிளான் பண்ணிய விஜய் டிவி ஜீ தமிழ்.. வெளியான கலாநிதி மாறனின் ரகசியம்

Serial: நம்முடைய தாத்தா பாட்டி காலத்தில் இருந்து இப்பொழுது வரை தொலைக்காட்சி என்று சொல்வதை விட சன்டிவி என்று சொல்வது தான் அதிகமாக இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களை கவர்ந்ததால் அனைவரும் சன் டிவி என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அதிலும் சன் டிவி சீரியல்கள் அனைத்தும் மக்களுடன் ஒன்றிணைத்து பார்ப்பவர்களை கவர்ந்தது.

அதனால் தான் இன்னும் வரை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி முதலிடத்தில் இருக்கிறது. இந்த சேனலை பார்த்து விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பல சேனல்கள் புதுப்புது நாடகங்களை ஒளிபரப்பாகி கொண்டு வருகிறார்கள். ஆனாலும் டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் தான் இருக்க முடிகிறது.

அதற்கு என்ன காரணம் ஏன் சன் டிவி மட்டும் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்று வருகிறது என்ற ரகசியம் தற்போது வெளியாகிவிட்டது. அதாவது விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே முன்னாடியே பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முக்கியமாக ஜீ தமிழ் சேனலில் நாளைக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியலை முதல் நாளே பார்க்கும் வகையில் ZEE5 ஆப் மூலம் பார்த்து விடுகிறார்கள்.

இதனால் டிவியில் ஒளிபரப்பாகும் பொழுது சீரியலை யாரும் பார்ப்பதில்லை. இதனை தொடர்ந்து விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுமே இன்றைக்கு ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் காலையில் 6.30 மணி முதல் ஹாட்ஸ்டார் ஆப் இல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும். அதனால் விஜய் டிவியில் உள்ள சீரியல்களை ஏற்கனவே மக்கள் பார்த்து விடுவதால் பெரும்பாலானவர் டிவியில் பார்ப்பதில்லை.

ஆனால் இந்த இரண்டு சேனல்களும் செய்யாத ஒரு விஷயத்தை சன் டிவி செய்திருக்கிறது. சன் டிவி சீரியலை பொருத்தவரை நீங்கள் டிவியில் மட்டும் தான் முதன் முதலில் பார்க்க முடியும். இதில் பார்க்க தவறினால் மட்டுமே சன் நெக்ஸ்ட் ஆப் மூலம் பார்க்க முடியும். இதனால் மக்கள் அனைவரும் சன் டிவியில் உள்ள சீரியல்களை தொலைக்காட்சியில் மட்டும் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

தற்போது இதே ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணும் விதமாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல்கள் சீரியல்களை முன்கூட்டியே பார்க்கும் வாய்ப்பை நிறுத்தப் போகிறார்கள். அதனால் தொலைக்காட்சியில் மட்டும் பார்க்கும்படி அமைந்துவிட்டால் டிஆர்பி ரேட்டிங்கும் அதிகரித்து விடும். அப்பொழுது எந்த சேனல் அதிக புள்ளிகளை பெறுகிறது என்பதை பார்க்கலாம் என்கிற அடிப்படையில் கலாநிதி மாறன் ரகசியத்தை பாலோ பண்ண போகிறார்கள்.

இந்த தகவல் தற்போது வெளியான நிலையில் இன்னும் கூடிய விரைவில் ஹாட்ஸ்டார் மற்றும் ஜி5 ஆப் மூலம் முன்கூட்டியே பார்க்கும் சீரியல்களை இனி பார்க்க முடியாது. இதனால் சன் டிவி ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி தொலைக்காட்சியில் மட்டும் சீரியல்களை ஒளிபரப்பி யார் முதலிடத்தை பிடிக்கப் போகிறார்கள் என்பதை போட்டி போட்டு பார்க்க போகிறார்கள்.

Trending News