ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2025

கீர்த்தி சுரேசை பெண் கேட்டு சென்ற இயக்குனர்.. டைரக்சனை விட்டுட்டு இதெல்லாம் செஞ்சதால படம் பிளாப்பா?

Keerthy Suresh: நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்ட நாள் காதலர் ஆண்டனி என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

கீர்த்தி சுரேஷ் சினிமாவில் அறிமுகமானபோது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அவர் மீது மிகப்பெரிய க்ரஷ் இருந்தது.

இது ரசிகர்களுக்கு மட்டுமில்லை ஹீரோக்களுக்கும் இருந்திருக்கிறது. இதைத் தாண்டி ஒரு இயக்குனர் கீர்த்தி சுரேஷ் வீட்டுக்கு பெண் கேட்டு போயிருக்கிறார்.

அதை சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த இயக்குனரே சொல்லி இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 படத்தில் நடித்தார்.

கீர்த்தி சுரேசை பெண் கேட்டு சென்ற இயக்குனர்

அப்போது அந்த படத்தில் ஹீரோவாக நடித்த விஷாலின் பெற்றோர்களுக்கு கீர்த்தியை ரொம்ப பிடித்து போய்விட்டதாம்.

விஷால் இயக்குனர் லிங்குசாமியை பார்த்து கீர்த்தி வீட்டில் பெண் கேட்கும் படி சொல்லி இருக்கிறார். லிங்குசாமி விஷாலின் அப்பா பேச்சை கேட்டு கீர்த்தி சுரேஷ் வீட்டுக்கே போயிருக்கிறார்.

அதற்கு கீர்த்தி சுரேஷ் இதுக்கா இவ்வளவு தூரம் வந்திங்க நான் வேற ஒருத்தரை காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டாராம்.

இந்த பேட்டி வைரல் ஆகி கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் டைரக்ஷனை விட்டுட்டு விஷாலுக்கு பெண் தேடினால் படம் இப்படித்தான் தோல்வியடையும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Trending News