ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2025

சூர்யாவை பெயிலர் ஹீரோன்னு சொல்றதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கோங்க.. சம்பவம் பண்ணிய அந்த 10 வருடங்கள்!

Suriya: சூர்யாவை பற்றி சமீப காலமாக வெளிவரும் செய்திகள் எல்லாம் அவர் ஒரு ஃபெயிலியர் ஹீரோ என்பது போல் சித்தரிக்கின்றன.

சினிமா ஆசையே இல்லாமல் ஏதோ ஒரு உந்துதலால் சினிமாவுக்குள் வந்து மிகப் பெரிய ஹீரோவான அப்பாவின் பெயரை காப்பாற்றி விட வேண்டும் என்று போராடியவர்.

அடுத்தடுத்து தோல்விகள், நெகட்டிவ் விமர்சனங்கள் என்பதை தாண்டி சூர்யா தலைநிமிர்ந்து நின்றார்.

சம்பவம் பண்ணிய அந்த 10 வருடங்கள்!

சூர்யாவை தோல்வி ஹீரோ என முத்திரை குத்துவதற்கு முன் அவருடைய சினிமா கேரியரின் இந்த பத்து வருடங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

சூர்யாவின் வெற்றி அத்தியாயம் தொடங்கியது 2000 ஆண்டில்.

உயிரிலே கலந்தது, பிரண்ட்ஸ், நந்தா, மௌனம் பேசியதே, உன்னை நினைத்து, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், ஆயுத எழுத்து, கஜினி, ஆறு, சில்லுனு ஒரு காதல், வேல், வாரணம் ஆயிரம், அயன், சிங்கம், ஆதவன் என்று பத்து வருடங்களில் 18 ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார்.

விஜய், அஜித், சிம்பு, தனுஷ் போன்ற இப்போதைய டாப் ஹீரோக்கள் எல்லாம் அந்த பத்து வருட காலத்தில் வருஷத்திற்கு ஒரு ஹிட் படங்கள் கொடுத்தார்கள்.

இப்படி ஒரு வெற்றியை சாதித்து காட்டிய சூர்யா ஃபெயிலியர் ஹீரோவாக இருக்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

Trending News