Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், குமரன் கதாநாயகன் என்ற டைட்டிலை வின் பண்ணி 10 லட்ச ரூபாய் பணத்தை கைப்பற்றி விட்டார். இந்த வெற்றியை காவேரி குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து பேசி சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள். அப்பொழுது இதற்கெல்லாம் எனக்கு பக்கபலமாக இருந்தது விஜய் தான் என்று ஒரு வார்த்தையை தெரியாத்தனமாக குமரன் கூறிவிடுகிறார்.
இதனால் சாரதாவின் முகம் வாடிய நிலையில் குமரன் தெரியாத்தனமாக சொல்லிவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் அத்தை என்று சொல்கிறார். பிறகு இந்த பணத்தை விஜய் இடம் கொடுத்து விடலாம். நர்மதாவின் ஆபரேஷனுக்கு அவர்தான் பணம் கொடுத்தார் என்று குமரன் சொல்கிறார். அதற்கு காவிரி அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், அதற்கு பதிலாக தான் ஒரு வருடம் ஒப்பந்தத்தின் படி அவருடன் மனைவியாக இருந்தேன்.
எல்லாம் சரியாகி விட்டது இனி யாரும் அதை பற்றி பேச வேண்டாம், அவர் போட்டதற்கும் நான் உங்களிடம் சொல்லாமல் கல்யாணம் பண்ணிருக்கும் சேர்த்து நீங்கள் பேசியது எல்லாம் போதும். இனி அவரைப் பற்றி எதுவும் பேச வேண்டாம் முடிந்து போனது முடிந்து போனதாகவே இருக்கட்டும் என்று காவிரி சொல்கிறார். பிறகு குமரன் மற்றும் கங்கா இருவரும் சந்தோஷமாக அவர்களுடைய வாழ்க்கையை தொடங்கி விடுகிறார்கள்.
அடுத்ததாக காவிரியை நினைத்து தனியாக இருக்க முடியாமல் விஜய், காவிரி இருக்கும் இடத்திற்கு சென்று காவேரி மற்றும் சாரதாவின் மனசை மாற்றுவதற்கு தயாராகி விட்டார். அந்த வகையில் வீட்டில் இருந்து கிளம்பும்போது இதை தடுக்க வேண்டும் என்பதற்காக ராகினி, வெண்ணிலா வைத்து ஒரு சீன் போட ஆரம்பித்து விட்டார். அதனால் வெண்ணிலாவும், விஜய்யை எங்கேயும் போகாதபடி தடுக்கிறார்.
அப்பொழுது தாத்தா பாட்டி வெண்ணிலவை சமாளித்து பேசும் பொழுது விஜய் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி வெண்ணிலவை சமாதானப்படுத்தி ரூமுக்கு கூட்டிட்டு போகிறார். இதையெல்லாம் ராகினி யாருக்கும் தெரியாமல் வீடியோவை எடுத்து விடுகிறார். அந்த வீடியோவை காவேரிக்கு அனுப்பி விடுகிறார். பிறகு காவிரி தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது வந்த வீடியோவை பார்க்கிறார்.
காவேரி பார்க்கும் பொழுது சாரதாவும் அந்த வீடியோவை பார்த்து இதுதான் அந்தப் பையனின் குணம். நல்லவேளை இப்பொழுது அவனைப் பற்றி தெரிந்ததே என்று சந்தோஷப்பட்டு கொள். இனி மறுபடியும் அவனுடன் சேர வேண்டும் என்று கனவில் கூட ஆசைப்படாத. இல்லையென்றால் என்னை உயிரோடு நீ பார்க்க முடியாது என்று காவிரியை பிளாக்மெயில் பண்ணும் அளவிற்கு சாரதா கண்டிஷனாக சொல்லிவிட்டார்.
இதனை தொடர்ந்து காவிரி, வீடியோவை அனுப்பிய ராகினியை திட்டிக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக அங்கே விஜய் வந்து விடுகிறார். விஜய்யை பார்த்ததும் அதிர்ச்சியான காவிரி, விஜய் இடம் இருந்து விலகுவதற்கு முயற்சி எடுக்கிறார். ஆனால் விஜய், காவிரிக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்து விஜய் மனதில் காவிரி தான் இருக்கிறார். காவேரி தான் விஜயின் பொண்டாட்டி என்ற விஷயத்தை காவிரியின் குடும்பத்திற்கு புரிய வைக்கும் வரை இனி விஜயின் ஆட்டம் அதிரடியாக இருக்கப் போகிறது.