திங்கட்கிழமை, பிப்ரவரி 24, 2025

மும்பையிலிருந்து கிளம்பும் போதே கொடுக்கப்பட்ட மாமுஷி விஷம், துபாயில் மரணம்.. ஸ்ரீதேவிக்கு என்ன நடந்தது?

Sridevi: நடிகை ஸ்ரீதேவி மறைந்து இன்றுடன் ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் திருமண விழா ஒன்று கலந்து கொண்ட போது அங்கேயே உயிரிழந்து விட்டார்.

இப்போது எத்தனை ஹீரோயின்களை லேடி சூப்பர் ஸ்டார் என்றாலும் ரியல் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி தான்.

தமிழ் சினிமாவில் அத்தனை டாப் ஹீரோக்களுடனும் கைகோர்த்த ஸ்ரீதேவி பாலிவுட்டிலும் தன்னுடைய அடையாளத்தை உருவாக்கினார்.

தன்னுடைய மகள் ஜான்வியை எப்படியாவது ஹீரோயின் ஆக்க வேண்டும் என்று முயற்சி செய்த ஸ்ரீதேவி அவர் நடித்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மறைந்துவிட்டார்.

ஸ்ரீதேவிக்கு என்ன நடந்தது?

ஸ்ரீதேவியின் மரணம் மர்மமான மரணம் என்று பெரிய அளவில் பேசப்பட்டது. இதில் பிரபல தொழிலதிபர் தீப்தி சொன்ன விஷயம் தான் எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

ஸ்ரீதேவிக்கு மும்பையில் வைத்தே மாமுசி விஷம் கொடுக்கப்பட்டு விட்டது. உடல் உறுப்புகள் செயலிழந்து ஐந்தாவது நாளில் அவர் உயிரிழந்திருக்கிறார்.

மாமுசி விஷம் என்பது பாம்பின் விஷம் ஆகும். மேலும் ஸ்ரீதேவிக்கு ஒரு உடன் பிறந்த சகோதரி இருக்கும் நிலையில் அவர் ஸ்ரீதேவியின் இறுதி சடங்கிற்கு வராதது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் சொல்லியிருந்தார்.

காலம் வரும்போது இதையெல்லாம் ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன் என்று சொன்ன தீப்தி அதன்பின் இது குறித்து எதுவுமே பேசவில்லை.

Trending News