பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் செம ஹிட். பார்த்தவர்கள் எல்லாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். ஏற்கனவே 50 கோடிகள் வசூலித்த இந்த படம் இன்னும் ஒரு வாரத்திற்குள் 75 கோடிகள் நெருங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் அமெரிக்காவிலும், மற்ற நாடுகளிலும் படம் பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது.
ஏஜிஎஸ், அஸ்வந்த் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் ஆந்திரா, மற்றும் கர்நாடகா பக்கம் வட்டமிட்டு வருகிறார்கள். அங்கே இந்த படத்தின் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என கண்காணித்து வருகிறார்கள். எல்லா பக்கமும் டிராகன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் மொத்த யூனிட்டும் மன நிறைவோடு இருக்கிறது.
இந்த படம் அடித்த சூப்பர் ஹிட்டால் அஸ்வந்த் மாரிமுத்து இதே கூட்டணி மறுபடியும் அமையும் என மேடையில் வாக்குறுதி கொடுத்து விட்டார். இதனை கேள்விப்பட்ட வேல்ஸ் நிறுவனத்தின் ஓனர் ஐசரி கணேஷ் பிரதீப்பை பிடித்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளார்..
2019இல் வெளிவந்த கோமாளி படம் தான் இயக்குனராக பிரதீப் ரங்க நாதனின் முதல் படம். இந்த படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்தது வேல்ஸ் நிறுவனம் தான்.அந்தப் படமும் சூப்பர் ஹிட் ஆனது. இதனால் அடுத்து ஒரு படம் வேல்ஸ் நிறுவனத்திற்கு பிரதீப் பண்ணித் தருமாறு அக்ரீமெண்ட் போட்டுள்ளனர்.
மேலும் பிரதீப் மூன்று படங்களில் நடித்தும் வந்ததால் வேல்ஸ் நிறுவனம் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது அவருடன் ஒப்பந்தமாகிய படத்தை பண்ணாமல் மீண்டும் அஸ்வந்த் மாரிமுத்து உடன் கூட்டணி என்பதால் ஆட்டம் கண்டது வேல்ஸ் நிறுவனம். இருக்க இடம் கொடுத்தால் பறக்க நினைக்கிறார் என ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து விட்டது இந்த நிறுவனம்