செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 25, 2025

முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி சீரியல், சூசகமாக சொன்ன கோபி.. பாஸா பெயிலா? கேள்வி கேட்கும் சதீஷ்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவி சீரியலை பொருத்தவரை எந்த சீரியல் பெருசாக மக்களை கவரவில்லையோ அதை உடனடியாக தூக்கி விடுவார்கள். அதற்கு பதிலாக புத்தம் புதிய சீரியலை கொண்டு வந்து மக்கள் மனதை கவர்ந்து விடுவார்கள். ஆனால் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் கிட்டத்தட்ட 1200 எபிசோடு தாண்டிய நிலையில் இன்னும் முடிவுக்கு வராமல் மெகா தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.

ஆரம்பத்தில் இந்த சீரியல் குடும்ப இல்லத்தரசிகளின் மனதைக் கவர்ந்து பெண்கள் முதல் ஆண்கள் வரை பார்க்கும் படியாக வெற்றியை கொடுத்தது. ஆனால் போக போக கதை எதுவும் இல்லாமல் அரைச்ச மாவையே அரைத்துக் கொண்டு செல்லும்படியான கதைகள் எதுவும் இல்லாமல் தொடர்ந்து மக்களிடம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

அப்படிப்பட்ட இந்த சீரியலை முடிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் இருப்பதால்தான். ஆனால் தற்போது அதிகப்படியான எதிர்மறையான கருத்துக்களை பெற்றதால் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரப்போகிறது.

இந்த விஷயத்தை பாக்யா மற்றும் ராதிகாவின் கணவராக நடித்த கோபி என்கிற சதீஷ் ஒரு பதிவின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது பாக்கியலட்சுமி என்ற பப்ளிக் தேர்வு முடியும் நேரம் நெருங்கி விட்டது. இதில் நான் பாஸா பெயிலா என்பது ரசிகர்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது. மனதாலும் உடலாலும் சோர்வடைந்து விட்டேன் இருப்பினும் என் முயற்சிகள் அனைத்தையும் தொடர்ந்து கொடுத்து வருகிறேன்.

இனி முடிவு உங்கள் கையில் தான் என்று கோபி பதிவு போட்டு முடிவுக்கு வரப் போகிறது என்பதே சூட்சகமாக சொல்லி இருக்கிறார். என்னதான் பாக்கியலட்சுமி கதை சரியில்லை என்றாலும் இப்பொழுது வரை இந்த சீரியல் மக்கள் பார்ப்பதற்கு முக்கிய காரணம் கோபியின் நடிப்புதான் என்று பலரும் கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் கோபி என்கிற சதீஷ் நடிப்பில் பாஸாகி விட்டார் என்று மக்கள் பதில் அளித்து வருகிறார்கள்.

Trending News