Pradeep Ranganathan: இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இணையதளங்களில் எந்த பக்கம் பார்த்தாலும் இந்த படத்தைப் பற்றிய பேசாத ஆட்களே இல்லை என்று சொல்லலாம்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்கா பிரதீப் ரங்கநாதனுக்கு அதிக ஹைப் கொடுக்கும் வகையில் நிறைய விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.
சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
இரண்டு படத்தில் ஹீரோவாக நடித்த பிரதீப்புக்கு இவ்வளவு பில்டப் எதற்கு என்று தோன்றலாம். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று சொல்வார்கள்.
அப்படித்தான் பிரதீப்பை கொண்டாடுவதும். படத்தை இயக்கியவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் ஏற்கனவே சிம்புவை வைத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
தற்போது அடுத்து சிம்புவின் 51 வது படத்தை இயக்கப் போகிறார். சிம்பு பட இயக்குனர் என்பதால் இவர் இயக்கிய டிராகன் படத்திற்கு சிம்பு ரசிகர்களிடம் அமோக ஆதரவு.
அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் தான் அடுத்த தளபதி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அவருடைய அஸ்திரம் ஆன காமெடியை கையில் எடுத்து ஜெயித்துக் கொண்டிருக்கிறார் பிரதீப்.
அதனால் பிரதீப் விரைவில் சிவகார்த்திகேயனின் இடத்தை பிடித்து விடுவார் என தனுஷ் ரசிகர்களும் அவருக்கு அதிக அளவில் வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.