செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 25, 2025

விஜயாவின் ஆட்டத்திற்கு முடிவு கட்டப் போகும் ஜோடிகள்.. மாமியார் முன் சிந்தாமணியிடம் சவால் விடும் மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயாவின் சாப்பாட்டு பழக்க வழக்கங்களை மாற்றி உடம்பை குறைத்து கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்பதற்காக மனோஜ் டயட்டீஷனை வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். அவர் வந்ததுமே விஜயாவிடம் காபி டீ குடிக்க கூடாது என்ன சாப்பாடு எப்படி சாப்பிடணும் என்று நாங்கள் தருவது தான் சாப்பிட வேண்டும் என்று சொல்லி ஒரு லிஸ்ட் போட்டு விட்டார்.

விஜயாவும் கெத்தாக சரி என்று சொல்லி மீனாவை சமைக்க சொல்லி விடுகிறார். ஆனால் மனோஜ், டயட்டீஷனுக்கு அதிகமான சம்பளத்தை கொடுப்பதை தெரிந்து கொண்ட ரோகிணி கோபப்படுகிறார். அத்துடன் மனோஜும் அதை ஃபாலோ பண்ண வேண்டும் என்பதற்காக விஜயா மற்றும் மனோஜ் வீட்டில் அவர்களுக்கென்று தனியாக சமைத்தது சாப்பிட வேண்டும். அதனால் அதிகாரமாக மீனாவிடம் எனக்கும் இந்த மாதிரி சமைத்துக் கொடு என்று மனோஜ் கேட்கிறார்.

உடனே மீனா அத்தைக்கு சமைத்து கொடுப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நான் எதற்காக உங்களுக்கு சமைத்துக் கொடுக்கணும். உங்கள் மனைவிய சமைத்து கொடுக்க சொல்ல வேண்டியது தானே என்று கேட்கிறார். உடனே ரோகினி எனக்கு வேலை இருக்கிறது அதற்கெல்லாம் நேரமில்லை என்று சொல்லியதும் முத்து அப்படி என்றால் மீனாவுக்கும் தான் பூ கட்டுகிற வேலை இருக்கிறது என்று சொல்கிறார்.

அப்பொழுது விஜயா நீயும் அவளும் ஒண்ணா என்று பேசிய நிலையில் அண்ணாமலை மீனா சொல்வது சரி என்று மீனாவுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பித்து விட்டார். இந்த பிரச்சனைக்கு பிறகு மீனா சொன்னது என்னவென்றால் நான் மனோஜ்க்கு சமைச்சு கொடுக்க வேண்டும் என்றால் எனக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் வேண்டும் என்று கணக்கு போட்டு கேட்க ஆரம்பித்து விட்டார்.

இதை கேட்டதும் மனோஜ் இதெல்லாம் ரொம்ப டூ மச் என்று சொல்லியதும் ரவி நீ ஹோட்டலுக்கு சாப்பிட போனால் 2000 ரூபாய் கொடுக்க வேண்டியது வரும் என்று சொல்லி மனோஜை சம்மதிக்க வைத்து விட்டார். அந்த வகையில் மீனா இதுவரை சம்பளம் இல்லாமல் வேலைக்காரியாக இருந்தார். இப்பொழுது பார்க்கும் வேலைக்கு சம்பளம் வாங்க ஆரம்பித்து விட்டார் அவ்வளவுதான் வித்தியாசம்.

அடுத்ததாக விஜயா எனக்கு தேவையான சாப்பாட்டை சமைத்து பார்வதி வீட்டிற்கு வந்து கொடு என்று மீனாவிடம் அதிகாரமாக சொல்லிவிட்டு போய்விடுகிறார். மீனாவும் விஜயா சொன்னபடி எல்லாத்தையும் சமைத்துவிட்டு பார்வதி வீட்டிற்கு போகிறார். அங்கே போனதும் பரதநாட்டியம் படிக்க வந்த பசங்களில் காதல் ஜோடிகளாக சுற்றி வரும் பசங்கள் தனியாக பேசுவதை பார்த்த மீனா எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாகி விடுகிறார்.

ஏனென்றால் ஒரு முறை மீனா இதைப் பற்றி சொல்லிய நிலையில் விஜயா, மீனாவை தான் குறை சொல்லி வாய் அடைத்தார். அந்த வகையில் இன்னும் கூடிய விரைவில் அந்த காதல் ஜோடிகள் செய்யும் அலப்பறைகள் வெட்ட வெளிச்சமாகி விஜயாவின் பரதநாட்டிய பள்ளிக்கூடத்திற்கு ஆப்பு வைக்க போகிறார்கள். அடுத்ததாக அங்கே சிந்தாமணியை பார்த்த மீனா இது என்ன சிந்தாமணி இங்கு வந்திருக்கிறார் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்.

பிறகு விஜயா உடன் சிந்தாமணி கெத்தாக உட்கார்ந்து அதிகாரம் பண்ண ஆரம்பித்து விட்டார். அடுத்ததாக மீனாவை சீண்டிப் பார்க்கும் அளவிற்கு அவமானப்படுத்துகிறார். கூடவே விஜயாவும் சேர்ந்து கொண்டு மீனா பூ கட்டுவதை அலட்சியமாக பேசுகிறார். பிறகு சிந்தாமணிடம் சவால் விடும் அளவிற்கு மீனா நான் இந்த டெக்கரேஷனில் வளர்ந்து காட்டி உங்களைவிட ஜெயிக்கிறேன் என்று மாமியார் முன் சவால் விடுகிறார்.

இதற்கிடையில் மீனாவின் தங்கை சீதா டிராபிக் போலீஸ் அருண் வீட்டுக்கு போகிறார். அவர் சஸ்பெண்ட் முடித்து வேலைக்கு கிளம்பிய நிலையில் முத்துவிடம் ஏற்பட்ட பிரச்சனையும் அதனால் சட்டை கிழிந்ததை பற்றியும் சொல்கிறார். இதை கேட்டதும் சீதா, யார் என்று தெரியாமலேயே இவ்வளவு தூரம் உங்களிடம் பிரச்சனை பண்ண அந்த ஆள சும்மாவா விட்டீங்க என்று கோபமாக பேச ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் சீதா மற்றும் அருண் காதல் கூடிய சீக்கிரத்தில் முத்துக்கு தெரியப் போகிறது.

Trending News