செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 25, 2025

கதிருக்கு பிறந்த விடிவு காலம், சம்மந்தியை ரவுண்டு கட்ட போகும் பாண்டியன் குடும்பம்.. பரிதவிக்கும் தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பழனிவேலு சுகன்யாவுக்கும் ஏதோ பிரச்சினை என்று உணர்ந்த சரவணன், பழனிவேலுமிடம் கேட்கிறார். ஆனால் உண்மையை சொன்னால் அனைவரும் வருத்தப்படுவார்கள் என்பதற்காக சுகன்யாவின் கேரக்டரை பற்றி வெளியே சொல்லாமல் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தோம் என்று சொல்லி செந்திலையும் சரவணனையும் நம்ப வைத்து விடுகிறார்.

அதன் பிறகு செந்தில் எனக்கும் மீனாக்கும் எப்பவாவது சின்ன சின்ன பிரச்சனை வர தான் செய்யும் என்று சொல்கிறார். அதற்கு சரவணன் எனக்கும் தங்கமயிலுக்கும் சின்ன சங்கடங்கள் கூட வந்தது இல்லை, என்னிடம் கோபமாக கூட தங்கமயில் பேசுனதே இல்லை என்று சரவணன் சொல்கிறார். இதையெல்லாம் கேட்ட பழனிவேலு, படும் அவஸ்தையை வெளியே சொல்லாமல் கண்ணீர் வடிக்கிறார்.

அடுத்ததாக மீனாவின் அப்பா உடம்பு கொஞ்சம் சரியாகி விட்டதால் மீனா பார்த்து பேசுகிறார். அந்த நேரத்தில் செந்திலும் வந்து விடுவதால் மாமனாரிடம் நலம் விசாரித்துவிட்டு கிளம்பி விடுகிறார். பிறகு மீனாவின் அம்மா மாப்பிள்ளை தான் மூன்று நாளும் ஹாஸ்பிடல் இருந்து உங்களை கவனித்தார். அவர் மட்டும் இல்லை என்றால் நம் கொஞ்சம் சங்கடப்பட்டு இருக்க வேண்டும் என்று சொல்கிறார். அந்த வகையில் மீனாவின் அப்பா மனசு கொஞ்சம் மாறிவிட்டது.

இதனை அடுத்து தங்கமயில் வழக்கம் போல் வேலைக்கு போகிறேன் என்று சொல்லி கிளம்பி வந்து விடுகிறார். ஆனால் எங்கே போவது என்று தெரியாமல் நடுத்தெருவில் பரிதவித்து நின்று அம்மாவுக்கு போன் பண்ணுகிறார். உடனே தங்கமயிலின் அம்மா வீட்டுக்கு வா என்று சொல்லி கூப்பிடுகிறார். அங்கே போனதும் தங்கமயில் இக்கட்டண சூழ்நிலையை எடுத்துச் சொல்கிறார். உடனே நீ தினமும் வேலைக்கு கிளம்பி நம்ம வீட்டுக்கு வந்துவிடு அதுக்கப்புறம் சாயங்காலம் போகலாம் என்று சொல்கிறார்.

ஆனால் இதில் மாட்டிக் கொள்ளுவோமோ என்ற பயத்தில் ஒவ்வொரு நாளும் தங்கமயில் பரிதவிப்புடன் இருக்கிறார். அடுத்ததாக வீட்டுக்கு வந்த பாண்டியன், கோமதி இடம் பழனிவேலுவை பற்றி சொல்கிறார். இப்பொழுதெல்லாம் புது மாப்பிள்ளை ஒழுங்கா வேலை பாக்குறது இல்லை. கடையில் வந்து தூங்க தான் செய்கிறான் கடை வேலையில் கவனம் இல்லை என்று சொல்கிறார். அப்பொழுது கோமதியும் தம்பியை விட்டுக் கொடுக்காமல் பாண்டியனிடம் சப்போர்ட் பண்ணி பேசுகிறார்.

அந்த நேரத்தில் செந்தில் மீனா வீட்டிற்கு வந்து அப்பாவின் உடம்பு சரி ஆகி விட்டது என்று சொல்கிறார். உடனே கோமதி நான் வீட்டிற்கு போய் ஒரு நாள் பார்த்துட்டு வரேன் என்று சொல்கிறார். பிறகு பாண்டியன் மற்றும் பழனிவேலு கடைக்கு கிளம்பி வெளியே வந்து விடுகிறார்கள். அப்பொழுது போலீஸ் ஜீப் வருகிறது. உடனே பாண்டியன் என்னாச்சு என்று கேட்கும் பொழுது போலீஸ், நகை திருட்டு விசயமாக கதிரை பார்த்து பேச வேண்டும் என்று சொல்கிறார்.

உடனே வீட்டுக்குள் இருந்த கோமதி எதற்கு போலீஸ் ஜீப்பு வந்திருக்கிறது என்று மீனாவிடம் கேட்கிறார். அதற்கு மீனா ராஜியின் நகை காணாமல் போனதை போலீஸிடம் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார்கள். அது விஷயமாகத்தான் பேச வந்திருப்பாங்க என்று சொன்னதும் கோமதிக்கு பயம் வந்துவிட்டது. இன்னொரு பக்கம் ராஜி கதிருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிவிடுகிறார். கதிரும் வீட்டுக்கு வந்த நிலையில் பாண்டியன் கதிரை கூப்பிட்டு என்ன விஷயம் என்று கேட்கிறார்.

உடனே நடந்த விஷயத்தை சொல்லும் விதமாக ராஜி என்னுடைய நகையை கதிர் செலவு செய்யவில்லை கண்ணன் என்பவர்தான் திருடிட்டு போய்விட்டார். அதை நான் போலீஸிடம் புகார் கொடுத்திருந்தேன் என்று சொல்லியதும் பாண்டியன் கதிரை கூட்டிட்டு போய் ராஜியின் அப்பாவிடம் என் மகனை களவாணி என்று சொன்னீர்களா, அவன் ஒன்னும் உங்களுடைய நகையை எடுக்கவில்லை. யாரோ ஒரு கண்ணன் தான் உங்க நகையை திருடிட்டு போய் இருக்கான்னு சொல்லி கதிர் மீது எந்த தப்பும் இல்லை என்று புரிய வைத்து விட்டார். அந்த வகையில் இனி பாண்டியன், கதிரை பார்த்து திட்ட மாட்டார்.

Trending News