செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 25, 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் கோமதி ஹீரோயினாக கலக்கிய 5 படங்கள்.. அமிதாப்பச்சனே ஆசைப்பட்ட அழகி!

Nirosha: நடிகை நிரோஷா, இப்போது இவரை கோமதி என்று சொன்னால் தான் எல்லோருக்கும் தெரியும். பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் பாசமான அம்மா, அக்கறையான மாமியாராக அசத்திக் கொண்டிருக்கிறார்.

நிரோஷா நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் மற்றும் நடிகை ராதிகாவின் உடன் பிறந்த சகோதரி. இவர் நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இப்போது கோமதியை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் கண்டிப்பாக இவர் ஹீரோயினாக அசத்திய ஆறு படங்களை பார்த்து விட வேண்டும்.

அக்னி நட்சத்திரம்: 1988 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய வெற்றி பெற்ற அக்னி நட்சத்திரம் படத்தின் மூலம் தான் நிரோஷா ஹீரோயின் ஆக அறிமுகமானார்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக வரும் இவர் வா வா அன்பே அன்பே பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் நடிகர் அமிதாப்பச்சனையும் கவர்ந்திருக்கிறார்.

நடிகை ராதிகாவிடம் நிரோஷாவே தனக்கு ரொம்ப பிடிக்கும் என அமிதாப்பச்சன் சொல்லியதாக ராதிகா ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

சூரசம்ஹாரம்: நிரோஷாவுக்கு அடுத்த படமே கமலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதிலும் இந்த படத்தில் வரும் நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி என்ற பாடல் அந்த சமயத்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது.

இந்த படத்தின் வெற்றி நிரோஷாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை வாரி தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

செந்தூர பூவே: நிரோஷா ராம்கி உடன் 1988 ஆம் ஆண்டு இணைந்து நடித்த படம் தான் செந்தூரப்பூவே.

இவர் எத்தனை படங்கள் நடித்து இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களால் செந்தூரப்பூவே நிரோஷா என்று தான் அடையாளப்படுத்தப்படுகிறார்.

இந்த படம் அவருக்கு அடையாளத்தை கொடுத்ததோடு காதல் கணவர் ராம்கியையும் கொடுத்தது.

பாண்டி நாட்டு தங்கம்: 1989 ஆம் ஆண்டு நவரச நாயகன் கார்த்திக் உடன் நிரோஷா இணைந்து நடித்த படம் தான் பாண்டி நாட்டு தங்கம்.

தொடர் வெற்றி படங்களை கொடுத்த நிரோஷாவுக்கு இந்த படமும் பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே இளையராஜா இசையில் சூப்பர் ஹிட் அடித்தது.

மருது பாண்டி: 1990 ஆம் ஆண்டு நிரோஷா மீண்டும் ராம்கியுடன் இணைந்த படம் தான் மருதுபாண்டி. இந்தப் படத்தில் நடிகை சீதாவும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இந்த மருது பாண்டி படம் ராம்கியை தமிழ் சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது.

Trending News