Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யாவின் பிறந்தநாள் ஹோட்டலில் வைத்து மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட அனைவரும் பாக்யாவுக்கு வாழ்த்து சொல்லி கிப்ட்டுகளை கொடுத்து சந்தோஷப்பட்டு விட்டார்கள். அத்துடன் ராதிகாவும் வந்து பாக்யாவின் தோழி என்பதையும் நிரூபித்து வாழ்த்து சொல்லிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து இனியாவும் அம்மாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று ஒரு வீடியோவை ரெடி பண்ணி அசத்தி விட்டார். அந்த வீடியோவில் பாக்கியாவிற்கு சொல்லிக் கொடுத்த பள்ளிக்கூட வாத்தியார் முதல் தெரிந்த அனைவரையும் பேசவைத்து ராதிகா, செல்வி அக்கா, ஜெனி மற்றும் அமிர்தா சேர்ந்து பேசி பாக்கியவை பாராட்டி தள்ளி விட்டார்கள். இந்த வீடியோவை பார்த்து பாக்கிய கண்கணங்கி நின்று ரொம்பவே எமோஷனலாகி விட்டார்.
பாக்கியா மட்டும் இல்ல பார்ப்பவர்கள் நமக்குமே ஒரு உணர்வுபூர்வமான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. குடும்பத்தில் இருப்பவர்களும் மற்றவர்களும் நம்மளை உதாசீனம் படுத்தும் பொழுது துவண்டு போகாமல் நம்மால் என்ன முடியுமோ அதை செய்து கொண்டே வந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு சிறந்த உதாரணமாக பாக்கிய அவருக்குத் தெரிந்த சமையலை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது ஒரு தொழிலதிபராக வளர்ந்து இருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்ததும் பாக்கியா, இனியவை அரவணைத்து ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை என்று சொல்லி ஆனந்த கண்ணீர் விட்டார். அடுத்ததாக ஈஸ்வரி நானும் என் மருமகளுக்கு ஒரு சிறந்த கிப்ட்டை கொடுக்கப் போகிறேன் என்று சொல்லி கோபி தற்போது எங்களுடன் தான் வீட்டில் இருக்கிறார். அவர்களுக்குள் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டு எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடந்திருக்கிறது.
ஆனால் அதையெல்லாம் சரி செய்யும் விதமாக மறுபடியும் பாக்கிய கோபி வாழ்க்கையில் ஒன்று சேரப் போகிறார்கள். அவர்களுடைய மறு கல்யாணத்துக்கு இதே மாதிரி நீங்கள் அனைவரும் வந்து வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லி இதுதான் நான் பாக்யாவுக்கு கொடுக்கும் பிறந்தநாள் பரிசு என சொல்கிறார். இது எதிர்பார்க்காத ராதிகா மற்றும் பாக்யா அதிர்ச்சியாகி நிற்கிறார்கள்.
ஆனாலும் இந்த கோபி எதுவுமே நடக்காத போல் மறுப்பு தெரிவிக்காமல் பாக்யா பக்கத்தில் ஒரு டம்மியாகவே நிற்கிறார். எப்படியாவது கோபியை பாக்கிய தலையில் கட்டி வைத்து விட வேண்டும், அப்படி செய்து விட்டால் கோபி வாழ்க்கை சரியாகிவிடும். நமக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது கோபி நம் கண்ட்ரோலில் இருப்பார் என்ற ஆசையில் ஈஸ்வரி இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாக்யா, என் மாமியார் இதைப் பற்றி என்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. என் மீது ஏதோ அக்கறை காட்ட வேண்டும் என்பதற்காக இப்படி பேசிட்டாங்க. ஆனால் இந்த ஒரு விஷயம் கனவில் கூட நடக்காது. உடைந்து போன வாழ்க்கை உடைந்து போனதாகவே இருக்கட்டும், அதை ஒட்ட வைத்தால் நன்றாக இருக்காது.
என் லட்சியமே வேற இன்னும் தொடர்ந்து அதிகமான ரெஸ்டாரண்டை ஓப்பன் பண்ணி பெரிய தொழிலதிபராக வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அதை நோக்கி தான் என் பயணமும் இருக்கும். அதனால் கல்யாணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று ஈஸ்வரிக்கு சரியான பதில் அளித்து விட்டார்.