புதன்கிழமை, பிப்ரவரி 26, 2025

பாண்டியனிடம் கதிருக்காக வக்காலத்து வாங்கி பேசிய ராஜி.. உண்மையை கண்டுபிடிக்க போகும் முத்துவேல்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கண்ணனை பார்த்த ராஜி கண்ணன் மீது புகார் கொடுத்து திருடிய நகையை வாங்கி தரும்படி போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். இது விஷயமாக கதிரை பார்த்து பேசுவதற்காக போலீஸ், பாண்டியன் வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். உடனே பாண்டியன், போலீஸிடம் என்னாச்சு என்று கேட்கும் பொழுது நகை விஷமாக கதிரை பார்த்து பேச வேண்டும் கதிர் எங்கே என கேட்கிறார்கள்.

அந்த நேரத்தில் கதிரும் வந்து விடுகிறார். அப்பொழுது போலீஸ் சொன்னது என்னவென்றால் கண்ணன் அந்த நகை அனைத்தையும் விற்று செலவு பண்ணி விட்டதாக சொல்கிறார். அதனால் இப்போதைக்கு உங்களுடைய நகை திரும்ப கிடைக்காது. வேற ஏதாவது அவனுக்கு சொத்து வசதி இருக்கிறதா என்பதை பார்த்து நாங்கள் அந்த நகைக்கான பணத்தை கொடுப்பதற்கு ஏற்பாடு பண்ணுகிறோம் என்று சொல்லி போய் விடுகிறார்.

இது எதுவும் புரியாத பாண்டியன் என்னதான் நடக்கிறது என்பதை கேட்கிறார். அந்த வகையில் ராஜி சொன்னது என்னவென்றால் என்னுடைய நகையை கதிர் எடுத்து செலவு பண்ண வில்லை. என்னை வீட்டில் இருந்து கூட்டிட்டு போன கண்ணன் என்பவன் தான் நகையே திருடிட்டு போய்விட்டான். ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் தேவையில்லாத பிரச்சனை வரும் என்பதற்காக கதிர், அவர் மீது பழியை போட்டுக் கொண்டார் என்று சொல்கிறார்.

உடனே செந்தில் இது எதுவும் தெரியாத ராஜி குடும்பத்தில் இருப்பவர்கள் கதிரை பார்த்து திருடிட்டான் என்று சொல்லி அசிங்கப்படுத்தி பேசினார்கள் அதற்கு பதில் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். அப்பொழுது பாண்டியன், கதிரை கூட்டிட்டு முத்துவேல் மற்றும் சக்திவேலை கூப்பிட்டு என் மகன் என்னமோ உன்னுடைய நகையை திருடி செலவு பண்ணி விட்டான் என்று சொல்லி திருடன் பட்டத்தை கொடுத்த, ஆனால் அவன் எதுவும் பண்ணவில்லை.

உனக்கு தேவை என்றால் போய் எது உண்மை என்று விசாரித்து பாரு. என் மகன் உத்தமன் என்று சொல்லி பாண்டியன், கதிரை பாராட்டி விட்டார். சக்திவேல் மற்றும் முத்துவேல் இது என்ன புது கதையாக இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். உடனே கோமதியின் அம்மாவும் உங்களுக்கு இதுவே வேலையா போச்சு அவசர புத்தியால் கடைசியில் அவமானப்பட்டு நிற்பது தான். இனியாவது பொறுமையாக ஒரு விஷயத்தை யோசிக்க பழகுங்கள் என்று சொல்லிவிடுகிறார்.

அதன் பிறகு முத்துவேல்வுக்கு சின்ன சந்தேகம் வந்துவிட்டது. அந்த வகையில் போலீஸ் ஸ்டேஷனில் போய் விசாரித்தால் கண்ணன் யாரு அவன் ஏன் நகையே திருடிட்டு போனான். ராஜிக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் என்ற விஷயத்தை தெரிந்து கொள்ள மிகப்பெரிய வாய்ப்பாக அமையப்போகிறது. அப்படி மட்டும் முத்துவேலுவுக்கு தெரிந்து விட்டால் ராஜி கதிரை ஈசியாக மன்னித்து முத்துவேல் பாண்டியன் குடும்பத்தை ஏற்றுக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இதனை அடுத்து மொட்டை மாடியில் கோமதி மற்றும் பாண்டியன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அங்கே போன ராஜி, பாண்டியனை பார்த்து யார் என்ன சொன்னாலும் நீங்க உங்க பையனை சந்தேகப்படலாமா? கதிர் எப்படிப்பட்டவர் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. உங்க பையனை பற்றி உங்களுக்கே நல்லா தெரியும், அப்படி இருந்தும் ஏன் கதிரை எப்ப பார்த்தாலும் திட்டி அவமானப் படுத்துகிறார்கள் என்று கதிர்காக பாண்டியனிடம் வக்காலத்து வாங்கி பேசுகிறார்.

Trending News