Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஒரு வழியாக யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை என்று அன்பு ஆனந்தி சுயமாக ஒரு முடிவு எடுக்கிறார்கள்.
மகேஷை ஆனந்தியின் வீட்டிற்கு கூட்டி சென்று பெண் கேட்டது வார்டன் தான். நீங்க ஆரம்பிச்சத நீங்களே முடிச்சு வைங்க என்று சொல்லி ஆனந்தி வார்டனை அவளுடைய வீட்டிற்கு கூப்பிடுகிறாள்.
இதை ஒட்டு கேட்டுக் கொண்டிருந்த மித்ரா மகேஷின் அம்மா பார்வதி இடம் சொல்கிறாள்.
சுயம்புலிங்கத்தை ஏவி விட்ட மித்ரா
மித்ராவை பொருத்தவரைக்கும் அன்பு ஆனந்தி திருமணத்தை தாண்டி மகேஷ் முழுமையாக ஆனந்தியை வெறுக்க வேண்டும் என்பதுதான்.
இவர்கள் பெண் கேட்டு சென்று திருமணம் நடந்து விட்டால் மகேஷ் காதல் தோல்வியில் தான் இருப்பான். ஆனால் ஆனந்தியை முழுமையாக வெறுத்தால்தான் மித்ரா பக்கம் திரும்புவான் என்று நினைக்கிறாள்.
இதனால் அன்பு மற்றும் ஆனந்தி வார்டனுடன் ஆனந்தியின் வீட்டுக்கு சென்று பெண் கேட்பதை தடுக்க நினைக்கிறாள். அதற்கு கருவியாக சுயம்புலிங்கத்தை பயன்படுத்துகிறார்.
அன்பு, ஆனந்தி, வார்டன் ஊருக்குள் வரும் காரை சுயம்புலிங்கம் பார்த்து விடுகிறான். அன்பு மற்றும் ஆனந்தி காரில் இருந்து இறங்கி ஒளிந்து கொள்கிறார்கள்.
சுயம்புலிங்கம் வார்டனை பார்த்து என்ன இந்த முறை யாரை மாப்பிள்ளையா கூட்டிட்டு வந்து இருக்கீங்க என்று கேட்கிறான்.
கண்டிப்பாக இது ஆனந்திக்கு பெரிய கோபத்தை ஏற்படுத்தும். அடுத்தடுத்து பெண் கேட்டு வருவதால் தன்னுடைய குடும்பத்தின் பெயர் கெட்டுவிடும் என ஆனந்தி நினைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
இதனால் கண்டிப்பாக இவர்கள் வீட்டிற்கு சென்று தங்களுடைய திருமணத்தைப் பற்றி பேச வாய்ப்பில்லை.