வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2025

சிங்கப்பெண்ணில் மகேஷை வெளுத்து விட்ட ஆனந்தி.. போட்ட திட்டத்தில் ஜெயித்த பார்வதி!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகியிருக்கிறது.

எப்படியாவது அப்பாவை சந்தித்து தன்னுடைய காதலை பற்றி சொல்லி விட வேண்டும் என ஆனந்தி அன்பு மற்றும் வார்டனை அழைத்துக் கொண்டு ஊருக்கு சென்று கொண்டிருக்கிறாள்.

இந்த விஷயம் தெரிந்த மித்ரா பார்வதியிடம் நடக்கும் சம்பவத்தை சொல்கிறாள். அதே நேரத்தில் தில்லைநாதன் வார்டன் சொன்னதாக மகேஷிடம் அன்பு மற்றும் ஆனந்தியின் காதலை பற்றி சொல்கிறார்.

மகேஷை வெளுத்து விட்ட ஆனந்தி

பார்வதி, தில்லைநாதன், மகேஷ் மூன்று பேரும் சவரக்கோட்டைக்கு செல்கிறார்கள். வழியிலேயே அன்பு மற்றும் ஆனந்தி போகும் காரை வழிமறிக்கிறார்கள்.

அப்போது வார்டனை பார்த்த மகேஷ் உங்களை என் அம்மாவுக்கு சமமா பார்த்தேன். ஏன் இப்படி நடந்துக்கிறீங்க என்று கோபமாக கேட்கிறான்.

இது ஆனந்திக்கு பயங்கர கோபத்தை வர வைக்கிறது. மகேஷிடம் வார்டனை பற்றி நீங்க எதுவுமே தப்பா பேசாதீங்க. நானும் அன்பும் காதலிப்பது உண்மைதான் என உண்மையை சொல்கிறாள்.

இதே மகேஷுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது. மேலும் ஆனந்தி உண்மையை சொல்வதால் மகேஷ் அன்பு வை கொலை செய்ய முயற்சிப்பது போல் நேற்ற ஸ்பெஷல் ப்ரோமோ வெளியாகி இருந்தது.

இது உண்மையாக நடக்கிறதா அல்லது ஆனந்தியின் கனவா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News