Jyothika: நடிகை ஜோதிகா மும்பைக்கு போனதில் இருந்தே சர்ச்சையும் அவரை சுற்றிக் கொண்டது. சும்மாவே அவர் எது செய்தாலும் அதை பெரிய விஷயமாக பேசிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது.
இந்த நிலையில் பட பிரமோஷன் விழாவில் அவரே எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார்.
அதாவது சூர்யாவை திருமணம் செய்த பிறகு எல்லோரும் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி என்று சொல்கிறார்கள்.
சர்ச்சைக்கு வித்திட்ட ஜோ
சூர்யா ரொம்ப நல்லவர், அவரை திருமணம் செய்ய ஜோதிகா கொடுத்து வச்சிருக்கணும் என்று பேசுகிறார்கள். அப்போ என்ன திருமணம் செய்து கொள்ள சூர்யா மற்றும் அதிர்ஷ்டசாலி கிடையாதா.
நான் சூர்யாவை பற்றி பேசினால் அதை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.
அதுவே சூர்யா என்னை பற்றி பேசினால் மனைவியை பற்றியே எப்போதும் பேசுகிறார் என்று கிண்டல் அடிக்கிறார்கள் என சொல்லி இருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு தான் இந்த பாலின பாகுபாடு அதிகம் சந்தித்ததாக பேசி இருக்கிறார்.
சூர்யா ரொம்ப நல்லவர், அவரை திருமணம் செய்ய ஜோதிகா அதிர்ஷ்டம் பண்ணி இருக்கணும் என கொண்டாடியது தமிழ் சினிமா ரசிகர்கள் தான்.
அப்படி இருக்கும்போது ஜோதிகா இப்படி ஒரு பதில் சொல்லி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.