சனிக்கிழமை, மார்ச் 1, 2025

மொக்கையாக போகும் சிறகடிக்கும் ஆசை சீரியல்.. டாப் கியரில் பறக்கும் அய்யனார் துணை, சம்பவம் செய்த சோழன்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் நான்காவது ஐந்தாவது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது இந்த நாடகத்தை மொத்தமாக வெறுக்கும் அளவிற்கு ரோகிணியின் கதை அப்படியே மாற்றப்பட்டு வருகிறது. அதாவது பொய்யும் பித்தலாட்டமும் பண்ணி தன்னுடைய வாழ்க்கையை தக்க வைத்துக் கொண்டு மற்றவர்களை துன்புறுத்தினாலும் பரவாயில்லை என்பதற்கு ஏற்ப ரோகிணி தொடர்ந்து ஏமாற்று வேலை பார்த்து வந்தார்.

அந்த வகையில் கூடிய சீக்கிரத்தில் ரோகினியின் ரகசியங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டு ரோகினிக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது எதுவும் இனி இல்லாத வகையில் ரோகிணி டிராக் மாறி இருக்கிறது. அதாவது மனோஜிடமிருந்து 30 லட்சம் ரூபாயை ஏமாற்றி இல்லாத வீட்டை கொடுத்துட்டு போன கதிரை மனோஜ் பார்க்கிறார்.

அவரை துரத்தி பிடிக்கும் பொழுது மனோஜ்க்கு ஒரு விபத்து ஏற்பட்டு விடுகிறது. இதனால் அவருடைய கண் பார்வை இழக்கிறார். அப்பொழுது மனோஜ்க்கு ஆறுதல் சொல்லும் விதமாக நான் இருக்கிறேன் எதைப்பற்றியும் கவலைப்படாதே என்று ரோகினி மனோஜ்க்கு எல்லா விஷயங்களையும் பக்கத்திலிருந்து பார்த்து செய்யப் போகிறார். அப்படி ரோகினியின் கதை மாறிய நிலையில் குடும்பத்திலும் சரி மனோஜ்க்கும் சரி ரோகிணி தான் சூப்பர் என்பது போல் ஒரு பிம்பம் உருவாகிவிடும்.

அதனால் ரோகிணி பற்றிய உண்மை தெரிந்தால் கூட பெரிய அளவுக்கு ரியாக்ஷன் கொடுக்காமல் மன்னித்து விடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. கடைசி வரை செஞ்ச தப்புக்கு தண்டனை அனுப்பி வைக்காத படி ரோகிணி எஸ்கேப் ஆகுவது போல் இருப்பதால் சிறகடிக்கும் ஆசை தற்போது மொக்கையாகி விட்டது. பார்ப்பவர்கள் இந்த நாடகத்தை வெறுத்து இதற்கு பதிலாக 9 மணிக்கு அய்யனார் துணை சீரியலை ஒளிபரப்பு செய்ய சொல்லி கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

அய்யனார் துணை சீரியல் ஆரம்பித்து ஒரு மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் அதற்குள் ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்று விட்டது. முக்கியமாக எதார்த்தமாக நடித்து வரும் சேர சோழ பாண்டியன் பல்லவன் கதாபாத்திரங்கள் அனைவரையும் கவர்ந்து விட்டது. தற்போது நிலாவை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்ற பொம்மை கல்யாணம் என்று சொல்லி போலீஸ் ஸ்டேஷனில் நிலா குடும்பத்தின் முன் சோழன் நிலாக் கழுத்தில் தாலி கட்டி விடுகிறார்.

இதன் பிறகு சோழன் குடும்பத்திற்கு வந்த நிலா அங்கு இருப்பவர்களின் நிலைமையை மாற்றுவதற்கு என்ன செய்யப் போகிறார். அந்த குடும்பத்தில் இருந்து தப்பிப்பாரா அல்லது சோழனை மனதார புரிந்து கொண்டு வாழ்வாரா என்பது விறுவிறுப்பான கதைகளுடன் நகரப் போகிறது. அந்த வகையில் இந்த சீரியலை தான் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பு செய்ய சொல்லி மக்கள் கேட்டுக் கொண்டு வருகிறார்கள். இன்னும் ஒரு சில வாரங்களில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பிடித்து விடும்.

Trending News