Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரி கோவிச்சுட்டு அம்மா வீட்டுக்கு போயிருப்பதால் காவிரியையும் மாமியாரையும் சமாதானப்படுத்தி விட்டு பொண்டாட்டியை கூட்டிட்டு வருவேன் என்று விஜய் சபதம் போட்டு காவிரி இருக்கும் வீட்டிற்கு பக்கத்திலேயே குடி புகுந்து விட்டார். அந்த வகையில் விஜய் அவ்வப்போது காவிரி வீட்டுக்கு சென்று ஏதாவது பேசிவிட்டு வருகிறார்.
இந்த விஜய் தான் எனக்கும் மீண்டும் என்பதற்கு ஏற்ப காவிரியும் விஜய் செய்யும் அட்ராசிட்டியை யாருக்கும் தெரியாமல் ரசித்து பார்க்கிறார். காவேரிக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக பாட்டியும் நர்மதாவும் கூடவே இருந்து உதவி பண்ணுகிறார்கள். அடுத்ததாக விஜய் பால் காய்ச்சி முடித்துவிட்டு பால் டம்ளரை எடுத்துக்கொண்டு காவிரி வீட்டுக் கதவை தட்டுகிறார்.
அப்பொழுது சாரதா கதவை திறந்த நிலையில் விஜய்யை திட்டுகிறார். விஜய் பிடிவாதமாக பேசி பாலை குடிக்க வைத்து விடுகிறார். விஜய் பேசுவதை ரசித்துப் பார்த்துக் கொண்டே காவிரியும் என்ஜாய் பண்ணுகிறார். ஆனால் சாரதா கோபப்பட்ட நிலையில் விஜய் போன பிறகு விஜயின் தாத்தாவிற்கு ஃபோன் பண்ணி உங்க பேரனை கூப்பிட்டுக்கோங்க. தினமும் வீட்டிற்கு வந்து எங்களை தொந்தரவு பண்ணுகிறார்.
இப்படியே அவர் பண்ணினார் என்றால் நாங்கள் எங்கள் சொந்த ஊருக்கே போய் விடுவோம். உங்க பேரனால் ஒவ்வொரு நாளும் நிம்மதி இல்லாமல் தவிக்கிறோம் என்று கோவமாக பேசி விடுகிறார். பிறகு தாத்தா, விஜய்க்கு ஃபோன் பண்ணி நீ அங்கே இருக்க வேண்டாம் வீட்டிற்கு வா. கொஞ்சநாள் ஃப்ரீயா விடு அதன் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சொல்கிறார்.
ஆனால் விஜய் அதெல்லாம் முடியாது நான் வரும்பொழுது காவிரியுடன் வருவேன். இதே மாதிரியே என் மாமியாரிடம் பேசி என் மாமியாரே உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போ என்று சொல்லும்படி நான் வைக்கிறேன் என தாத்தாவிடம் சவால் விடுகிறார். அந்த வகையில் விஜய் செய்யும் விஷயங்கள் எல்லாத்தையும் காவிரி யாருக்கும் தெரியாமல் ரசித்துப் பார்க்கிறார். இப்படியே இவர்கள் இரண்டு பேரும் செல்ல சண்டைகளை போட்டு அவர்களுடைய காதலை வலுப்படுத்துகிறார்கள்.