வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2025

இரண்டாவது படத்திலேயே விடாமுயற்சி ஷேரை தூக்கிச் சாப்பிட்ட டிராகன்.. தமிழ்நாட்டுல வானவேடிக்கையான வசூல் வேட்டை

இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் டிராகன் படம் 45 கோடிகள் வசூல் செய்துள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆகி ஆறு நாட்கள் ஆனது. அதற்குள் இவ்வளவு பெருந்தொகையை வசூலித்தது பெரிய பிரமிப்பு தான். சிவகார்த்திகேயனின் அமரன் படம் கூட ரிலீசான 6 நாட்களில் இப்படி ஒரு வசூலை பார்க்கவில்லை.

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு இந்த படம் 8 கோடி என்ற அளவில் வசூலித்து வருகிறது. இப்படியே போனால் இந்த படம் இன்னும் பத்து நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 120 கோடிகள் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தயாரிப்பு நிறுவனம் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறது.

கிட்டத்தட்ட இந்த படத்தை வாங்கி விநியோகம் செய்தவர்களுக்கு 50 கோடிகள் வரை ஷேர் கொடுக்குமாம். இது அஜித்தின் விடாமுயற்சி படத்தை விட அதிகம். ஒரு புது ஹீரோ தான் நடித்த இரண்டாவது படத்திலேயே இவ்வளவு வசூல் மற்றும் ஷேர் கொடுத்துள்ளார் என்ற பெருமையை பிரதீப் வாங்கிவிட்டார்.

விடாமுயற்சி படம் 30 கோடி மட்டுமே ஷேர் கொடுத்தது. ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே படமும் நல்ல வசூல் மற்றும் பங்குகளை அள்ளி கொடுத்தது. இதனால் அவருக்கு பல தயாரிப்பாளர்கள் வலை விரித்து வருகிறார்கள்.ஆனால் அடுத்தும் ஏஜிஎஸ் உடன் தான் கூட்டணி போடுவார் என தெரிகிறது.

படத்தின் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் இருவரும் 15 வருட காலம் நண்பர்களாக இருக்கிறார்களாம். இதனால் இவர்கள் கூட்டணி மீண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அஸ்வந்த் மாரிமுத்து 2020 ஆம் ஆண்டு ஓ மை மை கடவுளே என்ற படத்தை இயக்கினார். அதுவும் சூப்பர் ஹிட் ஆனது.

Trending News