Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், பரோலில் வந்த குணசேகரன் ஆசை ஆசையாக கட்டின வீட்டிற்குள் போக முடியாத அளவிற்கு சாருபாலா செக் வைத்து விட்டார். இதனால் நடுத்தெருவில் நின்ற குணசேகரனை அறிவுக்கரசி அவருடைய வீட்டிற்கு கூட்டிட்டு போய்விட்டார். ஆனால் இதை எதிர்பார்க்காத கதிருக்கு ஒரு ஏமாற்றம் ஆகிவிட்டது.
ஏனென்றால் வெளியே வந்த குணசேகரனை வைத்து பிரச்சினை பண்ணி மறுபடியும் அவரை ஜெயிலுக்குள்ளே அனுப்பலாம் என்று பிளான் பண்ணிய கதிருக்கு மொத்தமாக இது ஏமாற்றமாகிவிட்டது. பிறகு குணசேகரன் கூடவே கரிகாலன் ஞானம் கதிர் தர்ஷன் என அனைவரும் அறிவுக்கரசி வீட்டிற்கு போய்விட்டார்கள். அங்கே போனதும் போஸ்டர் பெரியசாமி என்னதான் தங்கத் தட்டிலேயே வைத்து தாங்கினாலும் அது அவருடைய தட்டாக இருந்தால் தான் குணசேகரனுக்கு பெருமை என்று சொல்கிறார்.
அதாவது போஸ்டர் பெரியசாமி சொத்து விஷயத்தை கிண்ட ஆரம்பிக்கிறார். அப்படி கிளற ஆரம்பித்து விட்டால் கதிர் நிச்சயம் இதில் மாட்டிக் கொள்வார். கதிரின் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிவிடும். ஆனால் இதையெல்லாம் பார்த்த சக்தி என்ன தான் இருந்தாலும் குணசேகரன் கட்டின வீட்டிலேயே அவரை இருக்க விடாதபடி பண்ணியது கொஞ்சம் கூட நியாயம் இல்லை என்று ஜனனிடம் கேள்வி கேட்கிறார்.
அந்த வகையில் சக்தி பேச்சில் ஒரு தடுமாற்றம் இருப்பது போல் தெரிகிறது. எங்கே இவரும் அந்த குணசேகரன் கூட்டத்துடன் சேர்ந்து விடுவாரோ என்று பார்ப்பவர்கள் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். அடுத்ததாக ஜனனிக்கு பார்கவி போன் பண்ணி முக்கியமான ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்ல வேண்டும் என சொல்கிறார். ஜனனியும் வருகிறேன் என்று சொல்லி பார்கவியை சதித்து பேச போகிறார்.
அப்படி பேசும் பொழுது பார்க்கவி சொல்லும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் தரிசனின் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு இருக்கிறேன் என சொல்லப் போகிறார். அந்த வகையில் குணசேகரன் மற்றும் ஈஸ்வரியின் வாரிசு பார்க்கவிடம் வளருகிறது. இதை வைத்து குணசேகரன் ஆட்டத்திற்கு முடிவு கட்டலாம் என்று ஜனனி பிளான் பண்ணி தர்ஷன் கல்யாணத்தை நிச்சயமாக நிறுத்தி பார்கவியுடன் சேர்த்து வைத்து விடுவார்.
கடைசியில் அறிவுகரசிக்கும் மிகப்பெரிய தோல்வி ஆகிவிடும் குணசேகரனும் தோற்றுப் போய் கதிரிடம் ஏமாந்ததையும் நினைத்து பீல் பண்ண போகிறார். ஒரே கல்லில் மூன்று மாங்காவுக்கு குறி வைக்கும் ஜனனிக்கு பார்கவி மூலம் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.