Vijay: கடந்த இரண்டு நாட்களாக எந்த பக்கம் பார்த்தாலும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் புகைப்படங்கள் தான் வைரல் ஆக்கிக் கொண்டிருக்கின்றன.
இதற்கு காரணம் அவர் பாமக தலைவர் ஜிகே மணி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டதுதான்.
இரண்டு தலைமுறைகளாக விஜய்யை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு சட்டென ஜேசன் சஞ்சய்யை பார்த்ததும் அட அப்பா மாதிரியே இருக்காரே என்று தோன்றுகிறது.
ஓவர் நைட்டில் ஒபாமா ஆன விஜய் மகன்
ஆனால் இதையெல்லாம் தாண்டி ட்விட்டர் பக்கத்தில் வேறொரு பஞ்சாயத்தையே ஆரம்பித்து விட்டார்கள்.
அதாவது கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்ட விழாவுக்கு உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்ப நிதி கலந்து கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் அவருடைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆகியது.
நீங்க மட்டும் தான் உங்க வாரிசை பிரபலப்படுத்துவீங்களா, நாங்க மட்டும் என்ன சும்மாவா, இதோ வந்துட்டாருல்ல சிங்கக்குட்டி என தமிழக வெற்றி கழகம் தொண்டர்கள் தங்களுடைய அட்ராசிட்டியை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
சமூக வலைத்தளம் முழுக்க ஜேசன் சஞ்சய் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான். இத்தனைக்கும் இன்ப நிதி மற்றும் ஜேசன் சஞ்சய் இருவருமே அப்பாவின் புகழ் வெளிச்சம் படாமல் தான் இருந்து வருகிறார்கள். இருந்தாலும் தொண்டர்கள் இவர்களை விடுவதாக இல்லை.