Memes: பொதுவாக ஏப்ரல் மே வந்தா தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பித்ததுமே வெப்பம் தலைகாட்டத் தொடங்கிவிட்டது.

அதிலும் இது பிப்ரவரி மாசமா இல்ல ஏப்ரல் மே மஃப்டில வந்துருக்கான்னு ஒரு டவுட் வந்துருச்சு. அந்த அளவுக்கு வெயில் பொளக்கிறது.

பகலில் வெயில் சுட்டெரிப்பதும் இரவில் குளிர் எடுப்பதும் என என்னடா இது கிளைமேட் என்று மக்கள் புலம்பாத குறை தான்.

இது ஒரு புறம் இருக்க பிப்ரவரி மாதமே இப்படின்னா ஏப்ரல் மே உசுரோட இருப்பமான்னு தெரியலையே. இப்பவே இப்படி அனல் காத்து வீசுது.

மே மாசம் அக்னி காத்தா வீசும் போல என பதட்டமாகவும் இருக்கிறது. இதை நெட்டிசன்கள் வழக்கம் போல மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர்.

இன்னும் ஆரம்பிக்கவே இல்ல சாம்பிள் காட்டுனதுக்கே சாம்பல் ஆயிடுவானுங்க போல என பல மீம்ஸ் இணையத்தை சுற்றி வருகிறது.

அப்படி சோசியல் மீடியாவே கலக்கிக் கொண்டிருக்கும் வெயில் அலப்பறை மீம்ஸ் இதோ உங்களுக்காக.