வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2025

தனுஷை தலையில் துண்டை போட வைத்த 5 படங்கள்.. ஹீரோவா ஜெயிச்சாலும், தயாரிப்பாளரா தடுமாறுகிறாரே!

Dhanush: நடிகர் தனுஷ் நடிகராக, இயக்குனராக, பாடலாசிரியராக, பின்னணி பாடகராக தன்னை நிலைநிறுத்தி இருக்கிறார். ஆனால் தயாரிப்பாளர் என்று வரும்பொழுது தனுஷுக்கு அடி மேல் அடிதான் விழுந்திருக்கிறது.

தனுஷ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான வண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனத்தை தொடங்கி 14 ஆண்டுகள் ஆகிவிட்டது.

தொடர்ந்து ஐந்து படங்கள் கொடுத்த தோல்வி தனுஷுக்கு பெரிய அடியாக அமைந்தது. அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

தயாரிப்பாளரா தடுமாறுகிறாரே!

தங்க மகன் : தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் என பெரிய எதிர்பார்ப்புடன் 2015 ஆம் ஆண்டு ரிலீசான படம் தான் தங்க மகன். இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் மிகப்பெரிய அடி வாங்கியது.

இருந்தாலும் படத்தின் பட்ஜெட் மற்றும் கலெக்ஷன் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

காலா: தனுஷ் தன்னுடைய முன்னாள் மாமனார் ரஜினிகாந்தை வைத்து தயாரித்த படம் காலா. கபாலி வெற்றிக்கு பிறகு மீண்டும் ரஜினி மற்றும் ரஞ்சித்தை வைத்து தனுஷ் படம் பண்ணினார். 140 கோடியில் உருவான இந்த படம் 155 கோடி மட்டுமே வசூல் செய்தது.

VIP 2: வேலையில்லா பட்டதாரி முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் இரண்டாம் பாகத்தை தயாரித்தார்.

இந்த படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கினார். மேலும் பாலிவுட் ஹீரோயின் கஜோலை பல வருடங்களுக்குப் பிறகு இந்த படத்திற்காக தமிழில் நடிக்க வைத்தார்கள். 43 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 27 முதல் 30 கோடி தான் வசூல் செய்தது.

மாரி 2: மாரி முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. சாய்பல்லவி இந்த படத்தில் நடிப்பதால் பெரிய அளவில் படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த படத்தில் வெளியான ரவுடி பேபி பாடல் இன்று வரை வைரல்தான். இருந்தாலும் 17.5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 17 கோடி தான் வசூல் செய்தது.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: பவர் பாண்டி மற்றும் ராயன் படங்களை தொடர்ந்து தனுஷ் தன்னுடைய அக்கா மகனை ஹீரோவாக வைத்து இயக்கி தயாரித்த படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். 25 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை 5.41 கோடி தான் வசூல் செய்தது.

Trending News