Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் ஆரம்பித்த ஷோரூமில் கணக்குகளை பார்ப்பதற்கு அண்ணாமலையை முத்து ஷோரூக்கு கூட்டிட்டு போகிறார். அங்கே போன இடத்தில் கசாப்பு கடை மணி தலையில் ஹெல்மெட் போட்டு அண்ணன் பொண்ணு கல்யாணத்துக்காக பிரிட்ஜ் வாஷிங் மெஷின் ஏசி பொருட்களை வாங்குவதற்கு வந்திருப்பதாக ரோகினிடம் சொல்கிறார்.
அந்த சமயத்தில் அங்கு முத்து வந்து இருந்தாலும் முத்துவிடம் இருந்து மணி எஸ்கேப் ஆகிவிட்டார். அடுத்ததாக மனோஜிடமிருந்து 30 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றிவிட்டு போன கதிரை மனோஜ் ரோட்டில் பார்க்கிறார். உடனே அவரை பிடித்து விட்டால் பணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் கதிரை விரட்டிப் பிடிக்கிறார்.
அப்படி பிடிக்கப் போகும் பொழுது எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்பட்டு விடுகிறது. அதில் மனோஜின் கண் பார்வை கம்மியாகும் அளவிற்கு பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரோகினி, விஜயாவுக்கு போன் பண்ணி தகவலை சொல்கிறார்.
உடனே வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் வந்து மனோஜை பார்த்து கதறி அழுகிறார்கள். அப்பொழுது முத்து மற்றும் மீனா தான் அங்கு இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்லுகிறார். அந்த வகையில் மனோஜ்க்கு கண்ணில் கட்டு போட்டு இருப்பதால் ரொம்பவே ஃபீல் பண்ணி ரோகினிடம் பேசுகிறார்.
ஆனால் ரோகிணி நான் இருக்கும் வரை நீ எதை நினைத்தும் கவலைப்படாதே நான் உன்னை பார்த்துக்கொள்கிறேன் என்று ஆறுதலாக சொல்கிறார். அந்த வகையில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மனோஜ் பக்கத்திலிருந்து எல்லா விஷயத்தையும் ரோகிணி பார்க்கப் போகிறார்.
அப்படி பார்க்க ஆரம்பித்து விட்டால் ரோகிணியை எல்லோரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள், இதனால் ரோகிணி செஞ்ச தவறுகள் அனைத்தும் தெரிய வந்தாலும் பெருசாக கண்டு கொள்ள மாட்டார்கள். அத்துடன் சும்மாவே ரோகிணி மனோஜ், மீனாவை வேலைக்காரி போல் வேலை வாங்குவார்கள்.
தற்போது இப்படி ஒரு சூழ்நிலையில் இருக்கும் பொழுது ரோகினி மனோஜ்க்கு மொத்தமாக சம்பளம் இல்லாத வேலைக்காரியாக எல்லா பணிவிடையும் செஞ்சு தியாகி பட்டத்தை சுமக்க போகிறார். இதெல்லாம் பார்த்தும் வழக்கம் போல் முத்து எதுவும் சொல்லாமல் டம்மியாகவே நிற்கப் போகிறார். இதுதான் சான்ஸ் என்று விஜயாவும் மீனாவிடம் அராஜகம் பண்ணி எடுபிடி ஆக்கப் போகிறார்.