சனிக்கிழமை, மார்ச் 1, 2025

பாண்டியனிடமிருந்து செந்திலை பிரிக்க மீனாவின் அப்பாவுக்கு கிடைத்த வாய்ப்பு.. வேலையில் சேர்ந்த தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மீனாவின் அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்ததால் மீனா மற்றும் செந்தில் கூடவே இருந்து எல்லா உதவிகளையும் செய்து வருகிறார்கள். இதனால் மீனாவின் அப்பாவுக்கு இருந்த கோபமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் கோமதியும், மீனாவின் அப்பாவை பார்த்து பேசுவதற்காக வீட்டிற்கு வருகிறார்.

வந்ததும் அக்கறையாக பேசி கோமதி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பிறகு மீனாவிடம் உனக்கு நல்ல மாமியார் கிடைத்திருக்கிறார் என்று மீனாவின் அம்மா சொல்கிறார். இதனைத் தொடர்ந்து மீனாவின் அப்பா, செந்தில் இடம் வீட்டை பற்றியும் கடையை பற்றியும் விசாரிக்கிறார். அந்த வகையில் செந்தில் சம்பாதிக்கிற பணத்தை மீனாவிடம் தான் கொடுத்து வைப்பதாக மீனாவின் அம்மா சொல்கிறார்.

ஆனால் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை எல்லா பொறுப்பையும் பாண்டியன்தான் பார்த்து வருகிறார். செந்திலுக்கு என்று தனி சம்பளமும் கிடையாது பணமும் இல்லை என்பது தெரிந்து விட்டால் நிச்சயம் அந்த வீட்டில் இருந்து செந்திலை தனியாக பிரித்து கூட்டிட்டு எல்லா பொறுப்பையும் கொடுத்து விடுவார். ஏனென்றால் இதே மாதிரி ஒரு சூழ்நிலையில் தான் முதல் சீசனில் ஜனார்த்தன், ஜீவாவை கூட்டிட்டு வந்து பொறுப்புகளை கொடுத்தார்.

அதே மாதிரி தற்போது செந்தில் ஏற்கனவே பாண்டியன் மீது மனக்கசப்பில் இருப்பதால் நிச்சயம் மாமனார் சொன்னபடி கேட்டு தனியாக வர வாய்ப்பு இருக்கிறது. அடுத்ததாக தங்கமயில் வழக்கம் போல் ஆபிஸ்க்கு கிளம்பி வந்த நிலையில் எங்கேயாவது போகணும் என்று முடிவு எடுத்து பக்கத்தில் ரெஸ்டாரண்டில் ஒரு வேலை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட தங்கமயில் அங்கே சேர்ந்து விடுகிறார்.

ஆனால் சப்ளையர் வேலை தான் காலியாக இருக்கிறது என்பதை தெரிந்தாலும் பரவாயில்லை என்று தங்கமயில் வேலை பார்க்க துணிந்து விட்டார். அந்த சமயத்தில் தங்கமயிலின் அம்மா போன் பண்ணி நீ அப்படி எல்லாம் ஒரு வேலையும் பண்ண வேண்டாம் வீட்டிற்கு வா என்று கூப்பிடுகிறார். அதற்கு தங்கமயில் உன் பேச்சை கேட்டதனால் தான் நான் இவ்வளவு தூரம் அவஸ்தைப்படுகிறேன்.

இனி நானே எல்லாத்தையும் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி வேலையில் சேர்ந்து விடுகிறார். அடுத்ததாக ராஜி தோழியுடன் சேர்ந்து வெளியே போவதற்கு பணம் இல்லாமல் அவஸ்தைப்படுகிறார் என்பதை உணர்ந்த கதிர், கோமதி இடம் பணம் கேட்டு ராஜ் இடம் கொடுத்து நீ உன்னுடைய ஆசையை எதற்காகவும் விட்டுக் கொடுக்காத என்று சொல்லி பணத்தை கொடுக்கிறார்.

Trending News