செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

டபுள் ஹேப்பி மூடில் சூப்பர் ஸ்டார்.. பெரிய இடத்திலிருந்து நெல்சனுக்கு வந்த கிரீன் சிக்னல்

ஜெயிலர் 2 படம் மார்ச் இரண்டாவது வாரத்தில் இருந்து சூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறார்கள். ஏற்கனவே ஸ்கிரிப்டில் சின்ன சின்ன மாற்றங்களை செய்ய சொல்லி உள்ளார் ரஜினிகாந்த். இப்பொழுது பெரிய இடத்தில் இருந்தும் ஹேப்பி நியூஸ் ஒன்றும் வந்திருக்கிறது.

ஜெய்லர் முதல் பாகத்தில் மேத்யூ கதாபாத்திரத்தில் மோகன்லாலும், நரசிம்மன் கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடித்திருந்தனர். இந்த படத்தில் இவர்களது நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. படத்திற்கு எக்ஸ்ட்ரா பூஸ்ட் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் இவர்கள் இருவருக்கும் முக்கிய பங்கு கொடுக்குமாறு ஸ்கிரிப்ட் எழுத சொல்லி இருந்தார் சூப்பர் ஸ்டார். முதல் பாகத்தை விட அடுத்த பாகத்தில் நீண்ட நேரம் அவர்கள் திரையில் தோன்றுமாறு கதை

இதனிடையே சிவராஜ் குமாரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் அமெரிக்கா சென்று ட்ரீட்மென்ட் எடுத்து வந்தார். அவருக்கு புற்றுநோய் இருப்பதால் இந்த படத்தில் அவர் நடிப்பது பெரிய கேள்விக்குறியாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அதற்கு நல்ல செய்தி கிடைத்துவிட்டது.

இதனால் ரஜினி முதல் இயக்குனர் நெல்சன் வரை உற்சாகமாய் வேலை செய்து வருகிறார்கள். சிவராஜ்குமார் ஜெய்லர் 2 படத்திற்கு 20 நாட்கள் கால் சீட் கொடுத்திருக்கிறார். மே மாதத்திற்குள் தன்னுடைய காட்சிகளை எல்லாம் முடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement Amazon Prime Banner

Trending News