வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2025

காற்றுள்ள போதே விஷால், அருண் விஜய் ஆடும் ஆட்டம்.. நேரம்ன்னு தலையில் அடித்துக் கொள்ளும் தயாரிப்பாளர்கள்

விஷால் திடீரென உச்சாணிக்கொம்பில் ஏறிவிட்டார். எல்லாத்துக்கும் காரணம் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த மதகஜ ராஜா படம் தான். சுமார் 50 கோடிகள் வசூலித்த இந்த படம் அனைத்து தயாரிப்பாளர்களையும் வாயை பிளக்க செய்தது.

இதனால் இதே காம்பினேஷனில் அடுத்து படம் இயக்குமாறு பல நிறுவனங்கள் சுந்தர் சி மற்றும் விஷாலை தேடி வந்தனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி தரும் அளவில் விஷால் தன்னுடைய சம்பளத்தை உயர்த்திவிட்டார். 30 கோடிகள் வரை சம்பளம் கேட்கிறாராம்.

இதனால் எல்லா தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்கள். விஷால் ஏற்கனவே நடித்த ஆம்பள படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஆனால் விஷால் கேட்கும் சம்பளம் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது வேலைக்காகாது என சுந்தர் சி மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு சென்று விட்டார்.

நயன்தாரா நடிக்கும் அந்த படம் மார்ச் 15ஆம் தேதி சூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய்யை கேட்டுள்ளனர். அவரும் ஒரு பெரும் தொகையை கேட்டு அனைவரையும் வாயை பிளக்க செய்துள்ளார். இதனால் வில்லனாக யாரை நடிக்க வைப்பது என திணறி வருகிறது பட யூனிட்.

ஏற்கனவே அருண் விஜய் தனுஷ் இயக்கி வரும் இட்லி கடை படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து வருகிறார். அதற்கு அவர் வாங்கிய சம்பளம் எட்டு கோடிகள். இதையும் தாண்டி 15 கோடிகள் வரை சுந்தர் சி இயக்க உள்ள நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்துக்கு கேட்கிறாராம்

Trending News