Sabdham Movie Review: அடுத்த நொடி என்ன நடக்கும் என விறுவிறுப்பும் திகிலும் கலந்து வெளிவந்த ஈரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அதே கூட்டணி சப்தம் மூலம் இணைத்துள்ளது.
அறிவழகன் இயக்கத்தில் ஆதி, லட்சுமிமேனன், சிம்ரன், லைலா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் எப்படி இருக்கிறது என்பதை விமர்சனத்தின் மூலம் காண்போம்.
சப்தங்களை வைத்து அமானுஷ்யத்தை கண்டறியும் நிபுணராக இருக்கிறார் ஆதி. அவருக்கு மருத்துவக் கல்லூரியிலிருந்து ஒரு போன் வருகிறது.
சப்தம் ஒலித்ததா வலித்ததா.?
அங்கு மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்து வருவதாகவும் ஏதாவது அமானுஷ்யமா என கண்டறிய வேண்டும் என கேட்கின்றனர்.
அதனால் அங்கு செல்லும் ஆதி சப்தத்தை வைத்து ஆவிகளை கண்டுபிடித்தாரா? பிரச்சினைகளுக்கான காரணம் என்ன? மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது படம்.
தண்ணீரை வைத்து ஈரம் பணத்தை திகிலுடன் கொடுத்திருப்பார் இயக்குனர். அதேபோல் இந்த முறை சப்தத்தை கையில் எடுத்திருக்கிறார்.
ஆனால் அது கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிட்டது. படத்தின் மேக்கிங் அற்புதமாக இருந்தாலும் கூட சில இடங்களில் திரைக்கதை தடுமாறுகிறது.
ஆதி தன்னுடைய வேலையை சரியாக செய்திருக்கிறார். அதேபோல் மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளனர்.
ஆனாலும் அமானுஷ்ய கதையில் வரும் செண்டிமெண்ட் ஒட்டாத உணர்வை கொடுக்கிறது. அதேபோல் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை.
ஆக மொத்தம் இந்த சப்தம் ஈரம் படத்தை ஒப்பிடும் போது கொஞ்சம் குறைவு தான். இருந்தாலும் தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.