சனிக்கிழமை, மார்ச் 1, 2025

மகாநதி சீரியலில் லவ்வர்ஸை பிரிக்க நினைக்கும் சாரதா.. ரொமான்ஸில் புகுந்து விளையாடும் விஜய், ரசிக்கும் காவிரி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவேரி தான் என்னுடைய பொண்டாட்டி, அவள் மட்டும் தான் என் மனசுக்குள் இருக்கிறாள் என்பதை காவிரிக்கும் என்னுடைய மாமியார் சாரதாவுக்கும் புரிய வைத்துவிட்டு கையோடு காவிரியை கூட்டிட்டு வருகிறேன் என்று தாத்தாவிடம் சவால் விட்டு காவேரி குடியிருக்கும் வீட்டுக்கு பக்கத்திலேயே விஜய் வந்து விட்டார்.

வந்ததுடன் சும்மா இல்லாமல் காவேரியை சுத்தி சுத்தி லவ் டார்ச்சர் பண்ணுகிறார். அந்த வகையில் இது எனக்கும் பிடிச்சிருக்கு என்பதற்கு ஏற்ப காவேரியும் ரசித்துப் பார்க்கிறார். அத்துடன் காவிரிக்கு சப்போர்ட்டாக நர்மதா பாட்டி இருக்கும் பட்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குமரனும் கங்காவும் விஜய் பக்கம் மாறி கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் மாமியார் சாரதா தவிர மற்ற அனைவரையும் ஈசியாக விஜய் கவுத்து விடுவார். அதற்காக விஜய் செய்யும் சில்மிஷங்கள் அனைத்தும் பார்க்க ரசிக்கும் படியாக இருந்தாலும் காவிரி அம்மாவுக்கு வெறுப்பாக இருக்கிறது. ஆனாலும் விஜய் மனம் தளராமல் தொடர்ந்து காவிரிக்கு ரூட் விடுகிறார்.

விஜய் உடைய நோக்கத்தை புரிந்து கொண்ட சாரதா, காவிரியை விஜயுடன் நெருங்க விடாமல் தடுக்கிறார். அந்த வகையில் லவ்வர்ஸை பிரிக்கும் பாவத்தில் சாரதா, விஜயை நோகடித்து பேசுகிறார். ஆனாலும் காவேரி எங்கே போனாலும் பின்னாடியே விஜய் போயி மனசு மாற்ற முயற்சி எடுக்கிறார்.

சும்மாவே விஜயின் நடிப்பு அனைவரையும் கவர்ந்த நிலையில் தற்போது ரொமான்ஸில் புகுந்து விளையாடும் அளவிற்கு விஜய் அவருடைய காதல் சேட்டையை அதிகரித்துக் கொண்டே வருகிறார். இது பார்ப்பதற்கு ரொம்பவே சூப்பர் என்பதற்கு ஏற்ப காவேரி மற்றும் விஜயின் புரிதல் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

Trending News