சனிக்கிழமை, மார்ச் 1, 2025

போன முறை டிராகன் தான் , இந்த முறை ரெட் டிராகன்.. இட்லி கடை திறப்பை தள்ளி போடும் தனுஷ்

Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படமும், தனுஷின் இட்லி கடை படமும் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆவதாக முதலில் அப்டேட் வெளியாகி இருந்தது.

தனுஷ் மற்றும் அஜித் படங்கள் நேருக்கு நேர் மோத போவது தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் கொஞ்சம் குதுகலத்தை கொடுத்தது.

இந்த நேரத்தில் தான் நேற்று குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. தீனா, பில்லா, மங்காத்தா என்ற மூன்று படங்களையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ் செய்தது போல் இருக்கிறது இந்த டீசர்.

இட்லி கடை திறப்பை தள்ளி போடும் தனுஷ்

இதில் ஒரு படத்தின் கேரக்டர் அஜித் பண்ணினாலே எதிரே இருப்பவர்கள் தாக்குப் பிடிக்க முடியாது. மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்தது போல் ஏகே என்னும் ரெட் டிராகன் உடன் மோத யாருதான் முன் வருவார்கள்.

அதனால் தான் இந்த படத்தின் டீசர் வெளியானதிலிருந்து தனுஷ் தன்னுடைய இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற திட்டமிட்டு இருக்கிறாராம்.

ஏற்கனவே பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்துடன் ரிலீசாகி தனுஷ் இயக்கி தயாரித்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் படாத பாடு பட்டுவிட்டது.

டிராகனுக்கே இந்த நிலைமை என்றால், ரெட் டிராகனுக்கு கேட்கவா வேண்டும், இட்லி கடை திறப்பை தள்ளிதான் போட வேண்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Trending News