ஆதிக்ரவிச்சந்திரன் ஒரு ட்ரெண்டான டைரக்டர். அஜித்தை அந்த விஷயத்தில் அவர் ஆரம்பத்தில் இருந்தே கவர்ந்து விட்டார். அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் இயக்கிய குட் பேட் அக்லி டீசர் வெளிவந்து சக்கை போடு போட்டு வருகிறது.
திரிஷா இல்லனா நயன்தாரா ,AAA, மார்க் ஆண்டனி போன்ற படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இதில் விஷால் நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பு பெற்றது. அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப கதைகளை அமைப்பது தான் ஆதிக்ரவிச்சந்திரன் சிக்னேச்சர் ஸ்டைல்.
இவர் இயக்கத்தில் வெளிவரும் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீசாக உள்ளது. அஜித்குமாரின் கடைசி படமான விடாமுயற்சி சரியாக போகாததால் அவரது ரசிகர்கள் இந்த படத்தின் மீது ஓவர் எதிர்பார்ப்பு காட்டி வருகிறார்கள். அதற்கு ஏற்றார் போல் இதன் டீசர் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.
ஸ்ரீலீலா , திரிஷா, சுனில் , யோகி பாபு அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் வெளி வருகிறது குட் பேட் அக்லி படம். இந்த படத்தில் வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். அவருக்கும் கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோ கதாபாத்திரம் என்கிறார்கள்.
அர்ஜுன் தாஸ்க்கு ஜோடியாக பிரியா வாரியர் இந்த படத்தில் நடிக்கிறார். இருவருக்கும் பழைய சூப்பர் ஹிட்டான சிம்ரன் ஆடிய பாடலை படத்தில் வைத்துள்ளனர். எதிரும் புதிரும் படத்தில் சிம்ரனும், ராஜூ சுந்தரமும் ஆடிய ரொமாண்டிக் பாடலான தொட்டு தொட்டு பேசும் சுல்தான் பாடலை வைத்துள்ளார் ஆதிக்.