திங்கட்கிழமை, மார்ச் 3, 2025

சிங்கப்பெண்ணில் மித்ராவால் அன்பு உயிருக்கு ஏற்பட போகும் ஆபத்து.. மகேஷ் மீது விழும் கொலைப்பழி!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு மற்றும் ஆனந்தியின் காதலை தெரிந்து கொண்ட மகேஷ் மிருகமாகவே மாறிவிட்டான்.

ஆனந்திக்கு தன்னை பிடிக்கவில்லை அவள் அன்பு வை ஆத்மார்த்தமாக காதலிக்கிறாள் என்பதை மகேஷால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதே நேரத்தில் மகேஷ் தான் தன்னுடைய மகன் என்று ஹாஸ்டல் வார்டன் அன்பின் அம்மா லலிதாவிடம் சொல்லிவிடுகிறார்.

அன்பு உயிருக்கு ஏற்பட போகும் ஆபத்து

இனி கதை அடுத்த கட்டத்தை நோக்கி எப்படி நகரும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருந்தது. யாருமே எதிர்பார்க்காத வண்ணம் அன்புவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு அந்த பழி மகேஷ் மீது விழப் போகிறது.

அன்பு மற்றும் ஆனந்தியின் காதலை தெரிந்துகொண்டு மகேஷ் புலம்புகிறான். அந்த நேரத்தில் ஆதரவாக வரும் மித்ராவை கட்டிப்பிடித்து அழுகிறான்.

இதை மித்ராவை திருமணம் செய்ய போகும் அரவிந்த் பார்த்து விடுகிறான். இப்படியே விட்டா மகேஷ் மித்ராவை திருமணம் செய்து கொள்வான் என்ற பயம் வருகிறது.

அதனால் அன்பு வைத்து கொலை செய்துவிட்டு அந்தப் பழியை மகேஷ் மீது போட திட்டமிட்டு இருக்கிறான். அரவிந்த் போட்டிருக்கும் திட்டம் பலிக்கிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News