செவ்வாய்க்கிழமை, மார்ச் 4, 2025

விஜயாவின் திமிரு அடங்கும் நேரம் வந்தாச்சு, மனோஜ் செய்ய போகும் சம்பவம்.. ரோகினி மீது பரிதாபப்படும் மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ்க்கு கண்ணு தெரியாமல் போய்விடுமோ என்ற பயத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் இருக்கிறது. ஆனாலும் இந்த விஜயா வழக்கம் போல் மீனாவை திட்டுவதை மட்டும் விடவே இல்லை. காலையில் எழுந்ததும் மீனாவை காணவில்லை சமைக்கவும் இல்லை மனோஜ்க்கு சாப்பாடு கொண்டுகிட்டு போகணும் இன்னும் எங்க போயிருக்கார் என்று தெரியவில்லை என விஜயா, அண்ணாமலையிடம் புலம்ப ஆரம்பித்து விட்டார்.

விஜயின் புலம்பலை தாங்க முடியாத ரவி மற்றும் சுருதி, மீனாவுக்கு சப்போர்ட்டாக பேசுகிறார்கள். ஆனாலும் இந்த விஜயா, மீனா முத்துவை திட்டுவதை நிறுத்தவே இல்லை. அதன் பிறகு அண்ணாமலை பேச வேண்டியது எல்லாம் பேசி முடித்து விட்டாயா என்று சொல்லி டைனிங் டேபிள் மேலே மீனா அனைவருக்கும் தேவையான சாப்பாட்டை சமைத்து வைத்துவிட்டு ஆஸ்பிட்டலில் இருக்கும் ரோகினி மற்றும் மனோஜ்க்கும் சாப்பாடு எடுத்துட்டு போன விஷயத்தை சொல்கிறார்.

இதை கேட்டதும் விஜயா எதுவும் பேச முடியாமல் வாயடைத்து போய் நிற்கிறார். பிறகு சுருதி இதுதான் தேவையில்லாமல் அவசரக்குடுக்கையாக மூக்கை நுழைக்கக் கூடாது. கொஞ்சமாவது பொறுமையாக இருக்க வேண்டும், உங்க பையனுக்கு நீங்க இருந்து செய்வதைவிட மீனா பார்த்து பார்த்து தான் பண்ணுறாங்க. ஆனால் மீனாவை குறை சொல்வதை மட்டும் நிறுத்தவே இல்லை என்று விஜயாவை பார்த்து நாலு கேள்வி கேட்டுவிட்டார்.

பிறகு அனைவரும் ஆஸ்பத்திரிக்கு போன நிலையில் மனோஜின் கண்ணில் இருக்கும் கட்டை பிரிப்பதற்கு தயாராகி விட்டார்கள். அதற்காக மனோஜ் கண்விழிக்கும் போது ஒருவரை பார்க்க வேண்டும் என்று நர்ஸ் சொல்கிறார். உடனே முந்திரிக்கொட்டை மாதிரி விஜயா முந்திக்கொண்டு என்னதான் என் பையன் கூப்பிட்டு இருப்பான் என்று சொல்கிறார்.

அதற்கு அந்த நர்ஸ் ரோகினி என்பவரை கூப்பிடுகிறார் என்று சொன்னதும் விஜயாவின் முகம் வாடிப் போய்விட்டது. உடனே உள்ளே போன ரோகிணி, மனோஜ்க்கு ஆறுதலாக பேசி நிலையில் மனோஜ் நீதான் எப்போதும் என் கூடவே இருக்க வேண்டும். நான் கண் முழிக்கும்போது உன்னை பார்க்கணும் என்று சொல்கிறார். அந்த வகையில் மனோஜ் கண்ணில் இருக்கும் கட்டை பிரித்தவுடன் ரோகிணியை பார்க்கிறார் மனோஜ்க்கு எந்த வித பிரச்சனை இல்லாமல் கண் தெரிந்துவிடுகிறது.

இந்த சந்தோஷத்தில் ரோகினி வெளியே வந்து ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் எல்லோரும் என்னாச்சு என்று கேட்கும் பொழுது ரோகினி அழுது முடித்துவிட்டு மனோஜ் கண்ணில் எந்த பிரச்சினையும் இல்லை மனோஜ்க்கு கண் தெரிந்துவிட்டது என்று சொல்கிறார். ஆனால் இனிமேல் தான் விஜயாவின் கொட்டம் அடங்கப் போகிறது என்பதற்கு ஏற்ப மனோஜ், ரோகினி மீது அதிகப்படியான பாசத்தைக் காட்டி விஜயாவை உதாசீனப்படுத்த போகிறார்.

யாரை தலைமையில் தூக்கி வைத்து ஓவராக ஆடினாரோ அவரை விஜயாவின் திமிரை அடக்கப் போகிறார். இனிதான் விஜயாவுக்கு தெரியப் போகிறது பெற்ற பிள்ளைகளிடம் பாகுபாடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பது. மனோஜ் ரோகிணி மீது அதிக பாசத்தை கட்டுவதால் விஜயா டம்மியாக போகிறார். அப்பொழுது முத்து மற்றும் மீனாதான் விஜயாவுக்கு ஆறுதலாக இருக்கப் போகிறார்கள். இதனை அடுத்து ஹாஸ்பிடலில் எல்லோரும் மனோஜ் பார்த்து பேசிய பொழுது மீனா மட்டும் தனியாக நின்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது முத்து என்ன என்று கேட்கும் பொழுது ரோகினியை நினைத்தால் எனக்கு பாவமாக இருக்கிறது. உங்க அண்ணனுக்கு ஒரு சின்ன விபத்து என்று தெரிந்ததும் ரோகினி எப்படி துடித்து போய்விட்டார். ஆனால் உங்க அண்ணன் ரோகினியை ஏமாற்றும் விதமாக கிருஷ்க்கு அப்பாவாக இருக்கிறார். இந்த விஷயம் ரோகிணிக்கத் தெரிந்தால் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற பயம்தான் எனக்கு இருக்கிறது என்று சொல்கிறார். கடைசிவரை இந்த மீனா இப்படி மக்காக இருக்க போய் தான் எல்லோரும் மீனாவை அலட்சியப்படுத்துகிறார்கள்.

Trending News