செவ்வாய்க்கிழமை, மார்ச் 4, 2025

இனியாவின் காதலுக்கு சமாதி கட்டிய செல்வி, மக்காக இருக்கும் பாக்கியா.. கோபிக்கு பொண்ணு பார்க்கும் ஈஸ்வரி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஈஸ்வரிக்கு வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. அதனால் தான் தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைத்து எல்லோர்கிட்டயும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் ராதிகா இருக்கும் வரை கோபி இடமிருந்து ராதிகாவை பிரிப்பதற்கு என்ன எல்லாம் பண்ணனுமோ அதையெல்லாம் பண்ணி நினைச்சதை சாதிக்கும் அளவிற்கு ராதிகாவை பிரித்து விட்டார்.

தற்போது யாரும் இல்லை என்றதும் பாக்கிய தலையை உருட்டுகிறார். தனக்கும் தன் பையனுக்கும் ஒரு அடிமையான பெண் வேண்டும் என்பதால் பாக்கியா தான் அதற்கு சரிப்பட்டு வருவார் என்று நினைத்ததால் ஈஸ்வரி, கோபிக்கு பாக்கியாவை மறுபடியும் கட்டி வைக்கலாம் என்று முடிவெடுத்தார். இது பிடிக்காத பாக்கியா, ஈஸ்வரிடம் கரராக பேசிய நிலையில் தொடர்ந்து பாக்கியவுடன் சண்டை போடும் விதமாக ஈஸ்வரி தொந்தரவு கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் பாக்யா உன் கையில் பணம் காசு வந்ததும் யாரையும் மதிக்காமல் உன் இஷ்டத்துக்கு நடந்து கொள்கிறாய். உன் ஆணவம் எல்லாம் ஒரு நாள் அடங்கும். அப்பொழுது நான் சொல்வது புரியும் என்று சொல்லி சாபம் விடும் அளவிற்கு பாக்கியவை திட்டி விடுகிறார். அது மட்டும் இல்லாமல் நீ வேண்டாம் என்று சொன்னாலும் என் பையனுக்கு ஒரு துணை வேண்டும், அதனால் வேற ஒரு நல்ல பொண்ணை பார்த்து என் பையனுக்கு கட்டி வைப்பேன் என்று சவால் விடுகிறார்.

உடனே செல்வி, ஈஸ்வரி போனதும் உன் மாமியார் என்ன உனக்கு சாபம் விட்டது மட்டுமில்லாமல் இன்னொரு பெண்ணுடைய வாழ்க்கையும் கெடுப்பதற்கு கோபி சாருக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று சவால் விட்டும் போகிறார் என்று சொல்கிறார். இதை கேட்டதும் பாக்யாவும், ஆமாம் அந்த பெண்ணும் பாவம் என்று சொல்லி புலம்பிக்கொள்கிறார். அடுத்ததாக இனியா மற்றும் பாக்யா இருவரும் சேர்ந்து ஹோட்டலில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்பொழுது இனியாவிற்கு ரொமான்ஸ் பண்ண வேண்டும் என்று ஆசை வந்ததால் ஆகாசுக்கு போன் பண்ணி ரெஸ்டாரண்டுக்கு வா என்று கூப்பிடுகிறார். ஆனால் ஆகாஷ் நான் வரவில்லை வந்தால் தேவையில்லாத பிரச்சினை வரும் எல்லாத்துக்கும் சந்தேகமும் வந்துவிடும் என்று சொல்கிறார். ஆனால் அதை எதையும் கேட்காத இனியா, ஆகாஷை வர சொல்லி விடுகிறார். ஆகாஷ் வந்ததும் பாக்யா பேசிவிட்டு ஜூஸ் கொடுக்கிறார்.

பிறகு இனியா மற்றும் ஆகாஷ் இருவரும் ரெஸ்டாரண்டில் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை செல்வி அக்கா பார்த்து விடுகிறார். உடனே இதை இப்படியே விட்டு விடக்கூடாது என்று நினைத்த செல்வி அக்கா, ஆகாஷே போதும் நீ வீட்டுக்கு போ வேலை இருக்கிறது என்று சொல்லி அனுப்புகிறார். அதன் பிறகு வெளியே போன ஆகாசிடம் இனி இந்த ரெஸ்டாரண்டுக்கு வரவும் கூடாது இனிய பாப்பாவிடம் பேசவும் கூடாது என்று கண்டிக்கிறார். ஏனென்றால் செல்விக்கு, இனியா மற்றும் ஆகாஷ் மீது சந்தேகம் வந்துவிட்டது.

ஆனால் இதை புரிந்து கொள்ளாத பாக்யா, நம் பிள்ளைகள் மீது நாம் சந்தேகப்படக்கூடாது. அதனால் ஆகாசை நீ இங்கே வருவதற்கு தடை போடாதே என்று சொல்லி ஆகாஷிடம் நீ எப்பொழுது வேண்டுமானாலும் இங்கே வரலாம் போகலாம் என்று சொல்லி மக்கு பாக்யா என்று நிரூபித்து விடுகிறார்.

அடுத்ததாக கோபி, பாக்யாவுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து எழில் மற்றும் செழியன் இடம் பேசி வீட்டிற்கு குடும்பத்துடன் வர வைத்து விடுகிறார். ஆனால் இதற்கு அப்புறம் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பது பாக்யாவுக்கு மட்டும்தான் தெரியும். இனி அதையெல்லாம் சமாளிக்கும் விதமாக பாக்கிய அவஸ்தைப்பட போகிறார்.

Trending News