Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரியை விட்டு பிரிந்து இருக்க முடியாமல் விஜய் காவேரி இருக்கும் இடத்திற்கு ஓடி வந்துவிட்டார். வந்ததுடன் காவிரி மட்டும் இல்லாமல் காவேரி அம்மா சாரதா மனசையும் மாற்றி ஒட்டுமொத்தமாக விஜயை ஏற்கும் படி செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு அட்ராசிட்டியும் செய்து வருகிறார்.
அப்படி விஜய் செய்யும் எல்லா விஷயமும் காவிரி ரசிக்கும்படி இருந்தாலும் சாரதாவிற்கு கொஞ்சம் வெறுப்பாக இருக்கிறது. இருந்தாலும் அதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி மொத்தமாக மாமியார் மனதில் இடம் பிடித்து காவிரியை கூட்டிட்டு வந்து தீர்வேன் என்று சபதம் போட்டிருக்கிறார்.
அந்த வகையில் முதலில் காவிரி மனசை மாற்ற வேண்டும் என்பதற்காக காவேரி போகும் இடத்திற்கெல்லாம் விஜய் சென்று ரூட் விட்டு வருகிறார். காவிரியும் வெளியே வெறுப்பது போல் இருந்தாலும் மனசுக்குள் விஜய் செய்வதை ரசித்து பார்க்கிறார். ஆனால் இதையெல்லாம் பார்த்து கடுப்பான சாரதா, குமரனை கூட்டிட்டு வீட்டு ஓனரிடம் பேசுகிறார்.
அதாவது பக்கத்தில் இருக்கும் விஜய் எங்க வீட்டிலேயே நோட்டமிட்டு வருவது போல் தெரிகிறது. அதனால் அவரை காலி பண்ணி குடும்பங்களாக இருக்கும் ஒரு குடும்பத்தை வைக்க வேண்டும் என்று சொல்கிறார். உடனே ஓனர் அவர் மீது எந்த தவறும் இருக்காது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் வீட்டை காலி பண்ணி விடுங்கள் என்று சாரதாவிடம் அடாவடியாக பேசி விட்டார்.
பிறகு குமரன் புதுசாக ஒரு கடையை வாங்கி அதிலும் இரண்டு ஆட்களை வைத்து வேலை செய்யலாம் என்று குடும்பத்திடம் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கிறார். உடனே இது நல்ல ஐடியாவாக இருக்கிறது என்று சொல்லிய நிலையில் காவிரி முழு சப்போட்டம் செய்து மாடலிங் விளம்பரம் கொடுக்கிறார். அந்த வகையில் இதில் மாடலிங் செய்ய விஜய் கலந்து கொள்ள போகிறார்.
உடனே கங்கா உங்களுக்கு என்னதான் வேணும் விஜய் என்று கேட்கிறார். அப்பொழுது எனக்கு உங்க தங்கச்சி காவிரி தான் வேணும், என்னுடைய ஃபீலிங்ஸ் புரிந்து கொள்ளுங்கள் என்று விஜய் அவருடைய காதலை அழகாக வெளிப்படுத்தும் விதமாக காவிரி இல்லாத வாழ்க்கை எனக்கு வேஸ்ட் என்பதே புரிய வைக்கிறார்.
அந்த வகையில் விஜய்யின் காதலை புரிந்து கொள்ள போகும் குமரன் மற்றும் கங்காவும், விஜய் மற்றும் காவிரி சேர்வதற்கு உதவி செய்யப் போகிறார்கள். தொடர்ந்து இதே மாதிரி ஒவ்வொருவரும் மனசையும் மாற்றும் விதமாக விஜய் சில பல வேலைகளை பார்த்து சாரதா மனதையும் மாற்றி விடுவார்.