விஜய்க்கு குடைச்சல் கொடுப்பது யார்.? TVK ஆண்டு விழாவில் நடந்த குளறுபடி

tvk-vijay
tvk-vijay

Vijay: விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி ஒரு வருடம் நிறைவு அடைந்ததை ஒட்டி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் பிரசாந்த் கிஷோர் போன்ற முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் விஜய்க்கு குடைச்சல் கொடுக்க சில கட்சிகள் மோசமான வேலை செய்துள்ளதாக ராஜ்மோகன் கூறியிருக்கிறார். சிறந்த மேடைப் பேச்சாளராக இருந்தும் ராஜ்மோகன் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ராஜ்மோகன் விஜய்க்கு பல குடைச்சல்களை அரசியல் கொடுத்து வருவதாக கூறியிருந்தார். சாதாரணமாக புத்தக வெளியீட்டு விழாவை நடத்துவதற்கு பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

TVK ஆண்டு விழாவில் நடந்த குளறுபடிக்கு காரணம்

ஒரு விழா நடந்து கொண்டிருக்கும்போதே பாம்பு விடுவது, கரண்டை நிறுத்துவது, விபத்தை ஏற்படுத்துவது என பல பிரச்சனைகளை உண்டாக்கியுள்ளனர். ஆனாலும் மக்கள் பணி செய்வதற்காக நாங்கள் வந்துள்ளோம்.

ஆகையால் இவர்கள் எவ்வளவு குடைச்சல் கொடுத்தாலும் அதையும் மீறி ஒரு நல்லாட்சியை கொடுப்போம் என்று ராஜ்மோகன் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தவெக போட்டியிட உள்ளது.

இதில் கண்டிப்பாக விஜய் வெற்றி பெறுவார் என ராஜ்மோகன் கூறியிருக்கிறார். அவர் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement Amazon Prime Banner